முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (3)

முஸ்லிம் பெண்மணி தமது கணவருடன்

இஸ்லாமியப் பார்வையில் திருமணம்

இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற அருள் வளமிக்க ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாகவே, இருவரில் ஒருவர் மற்றவருக்கு ஆகுமானவராக ஆகிறார்.

இது மட்டுமின்றி, இதன் வழியாகத்தான், இருவரும் ஒரு நீண்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

இந்தப் பயணத்தின் மத்தியில் இருவரும் தங்களுக்குள் நேசம் கொண்டவர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு உள்ளவர்களாகவும், உதவி ஒத்தாசை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், இந்தத் திருமண ஒப்பந்தத்தின் வாயிலாக, ஒருவர் மற்றவரைக் கொண்டு நிம்மதியையும் அமைதியையும் பெறுகிறார். ஒருவர் மற்றவரது தோழமையில் வாழ்வின் சுபிட்சத்தையும், சுவையையும், பாதுகாப்பையும், மனமகிழ்ச்சியையும், திருப்தி உணர்வையும் அடைந்து கொள்கிறார்.

அல்லாஹ்வின் சங்கைமிகு நூலாம் அல்குர்ஆன், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற இந்த சட்டரீதியான ஒப்பந்தத்தை அழகிய முறையில் விளக்கிச் சொல்கிறது.

அன்பு, பாசம், நெருக்கம், உறுதி, புரிந்துணர்வு, இரக்கம் ஆகிய அனைத்தும் இந்த ஒப்பந்தத்தில் பரந்து காணப்படுகின்றன. இதனால்தான் இந்தத் திருமணத்திலே நற்பாக்கியம், ஈடேற்றம், வாழ்க்கையில் வெற்றி போன்ற நறுமணங்கள் வீசுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அர்ரூம் 30:21)

இந்தத் திருமண ஒப்பந்தம், மிக உறுதி மிக்க அடிப்படையில் கண்ணியமிக்க இறைவனால் ஏற்படுத்தப்படுகிற ஒப்பந்தமாகும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நன்மையை நாடிக் கொள்வதற்காக இதில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களுக்கிடையே இறையச்சம் கொண்ட இஸ்லாமியக் குடும்பத்தை நிர்மாணிக்கிறார்கள். இங்குதான் இஸ்லாமியக் குழந்தை வளர்கிறது. அதன் அறிவு வளர்கிறது. அதன் ஆன்மா, இஸ்லாமியப் பண்பாட்டிலே வார்த்தெடுக்கப்படுகிறது. Continue reading முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (3)

62.நபித்தோழர்களின் சிறப்புகள்

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3649

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”. மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், ‘உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?’ என்று கேட்பார்கள். ‘ஆம், இருக்கிறார்கள்” என்று (போரிடச் சென்ற) அவர்கள் பதில் செல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), ‘உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், ‘ஆம், இருக்கிறார்கள்” என்று சொல்வார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘ஆம், இருக்கிறார்கள்” என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3650

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் சொல்லும்படி கேட்கப்படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.

(இதை அறிவிக்கும் நபித்தோழர்) இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலை முறைக்குப் பிறகு இரண்டு தலைமுறைகளைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்று எனக்குத் தெரியாது. Continue reading 62.நபித்தோழர்களின் சிறப்புகள்