அத்தியாயம்-3 ஜகாத்.

ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இது பல தனித்தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட ஓர் அரிய அமைப்பாகும். திருக்குர்ஆனில் வரும் ‘ஜகாத்’ என்ற சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்தும் ஒரே தமிழ்ச்சொல் இல்லை. இதுபோலவே இதன் முழுப்பொருளையும் உணர்த்தும் ஒரே சொல் வேறு மொழிகளிலும் இல்லை.

தர்மம், கொடை, இனாம், அன்பளிப்பு, வரி என்ற சொற்கள் ‘ஜகாத்’ என்ற சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்துபவையாக இல்லை. இது மிகவும் விரிவான பொருளைக் கொண்டதாகும். Continue reading அத்தியாயம்-3 ஜகாத்.

கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள். Continue reading கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

இறை நேசர்கள் (2)

வாழ்க்கையில் எப்படித்தான் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ் ஒருவனை மட்டும் நாட வேண்டும். எவரிடத்திலும் முஸ்லிம் தன் துயரங்களை முறையிடுதல் ஆகாது என்று குர்ஆன் விளக்கிக் காட்டுகிறது: “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து ‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் புரிவான், அவனுடைய தூதரும் (அருள் புரியலாம்) நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்’ என அவர்கள் கூறியிருக்க வேண்டாமா?”. (9:59) Continue reading இறை நேசர்கள் (2)