அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (2)

செயல்படச் செய்யும் திருமறை.

திருக்குர்ஆன் தரும் அறிவின் பிரிதொரு தனித்தன்மை செயல்பட வேண்டும் என்ற உணர்வையும், உந்துதலையும் தருவதாகும். அது செயல்படத் தூண்டும் ஆக்கப்பூர்வமான அறிவாகும். அது மனதில் செயல்பட வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துவது.

திருமறை வசனங்களின் அமைப்பும், அவற்றின் போதனைகளும் எப்படி மனிதர்களை செயல்படும் பேரியக்கங்களாக மாற்றியது என்பதற்கு வரலாறு சான்று பகருகின்றது. அதுபோலவே திருமறையும் பல அத்தாட்சிகளைத் தருகின்றது.

பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இறைச்செய்தியின்பால் மக்களை அழைத்திடும்போது அவர்களுக்கு இருந்த ஒரே சக்தி திருக்குர்ஆனே ஆகும். அவர்கள் பெற்றிருந்த அறிவெல்லாம் திருமறை தந்த கருத்துக் கருவூலங்களே!
திருக்குர்ஆன் தரும் செயல்திறன் அளப்பரியது. தடுத்து நிறுத்த முடியாதது. Continue reading அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (2)

அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.

உண்மையான முஸ்லிமின் சமுதாய வாழ்க்கை மிகவும் உயர்ந்த கொள்கைகளின் கீழ் அமைந்ததாகும். வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருந்திடும் விதத்தில் ஒரு முஸ்லிமின் தனிவாழ்வும், பொதுவாழ்வும் அமைக்கப்பட்டுள்ளன. வர்க்கப் போராட்டம், இனவேறுபாடுகள், தனிமனிதனின் சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்லது சமுதாயம் தனிமனிதனை ஆதிக்கம் செலுத்துவது இவைகளெல்லாம் இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவை. Continue reading அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.

அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)

நோன்பு, இஸ்லாத்திற்கே உரிய ஒழுக்க, ஆன்மீக தனித்தன்மைகளுள் ஒன்றாகும். வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும்வரை உணவு, பானம், உடலுறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகி இருத்தலே நோன்பாகும். இது ரமளான் மாதம் முழுவதும் நோற்கப்படுவதாகும்.

இஸ்லாம், கடமையாக்கியுள்ள நோன்பிற்கு பல பரந்த பொருள்களுண்டு. அதனுடைய நோக்கமும் மிகவும் விரிவானதாகும். Continue reading அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)

இறைநம்பிக்கைக் கொண்ட ஆணும், பெண்ணும்…..

ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும், இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ திண்ணமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (அல்குர்ஆன்: 33:35)

இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்: தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்: ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 9:71)

அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான் : உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் – அவர் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி – நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே. (அல்குர்ஆன்: 3:195)

தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி – இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் – அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும். (அல்குர்ஆன்: 40:40)

ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம். (அல்குர்ஆன்: 16:97)

அல்லாஹ்வுக்கு உவப்பான செயல்களின் பால் இட்டுச்செல்லும் உறுதியான ஈமான்!

23:1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

28:55. அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து; ”எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்.

அல்குர்ஆன்