அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-2) (JESUS SON OF MARY)

இரத்தத் தியாகம் செய்து எல்லாப் பாவங்களிலிருந்தும் மொத்தமாக விடுதலை வாங்கித் தருவதல்ல நபி ஈஸா (அலை) அவர்களின் பணி. நபி ஈஸா (அலை) அவர்கள் இதற்காக அனுப்பப்பட்டவர்களும் அல்ல.

மக்களுக்கு இறைவனின் நேர்வழியைக் காட்டி, நல்லொழுக்கத்தைக் கற்பித்து, மரத்துப்போன அம்மக்களின் மனதைப் பண்படுத்தி, அவர்களின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பாவங்களைத் துடைத்திடவே நபி ஈஸா (அலை) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். மக்களால் மறக்கப்பட்டுவிட்ட இறை வெளிப்பாடுகளையும், இறை வழிக்காட்டுதல்களையும் நினைவுறுத்தி இறைவனின் மார்க்கத்தை நிலைநாட்டவே அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டார்கள். இந்தப் பணியை நிறைவேற்றுவதில் அவர்கள் இறைவனின் போதனைகளை மக்களிடையே பரப்பி வந்தார்கள். அத்துடன் தனது புனிதப் பணிக்கு வலுவூட்டுகின்ற விதத்தில் சில அற்புதங்களையும் செய்து காட்டினார்கள். Continue reading அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-2) (JESUS SON OF MARY)

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தோர் சிறப்பு.

1807. அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் மீது சாந்தி பொழியட்டும்” என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3326 அபூஹுரைரா (ரலி).

முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்

ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் இருந்தவர்களும் தத்தம் கரங்களை ஏந்தி மன்றாடினர். பிறகு மழை பெய்தது. இதை அடிப்படையாக வைத்து அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பக்தியும், நேர்மையும் நிரம்பிய நல்லவர்களைக் கொண்டு குறிப்பாக அஹ்லுல் பைத் (நபியின் சந்ததியைச் சார்ந்தவர்களைக்) கொண்டு மழை தேடிப் பிரார்த்தித்தல் மிக ஏற்றமாகும். Continue reading முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்

குறிப்பு (3)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்நேரம் கலீபாவிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம். Continue reading குறிப்பு (3)

அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை

வழிபாடுகளில் ஏற்றமானது தொழுகை. அத்தொழுகையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் கேட்டல், திக்ரு செய்தல் யாவும் அடங்கியிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில் சொல்ல வேண்டுமென்பது சட்டம். தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்து ‘வஜ்ஜஹ்த்து, தனா போன்றவை ஒதி முடித்ததும் குர்ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும். ருகூவிலும், ஸுஜுதிலும் குர்ஆன் ஓதுதல் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் திக்ருகள், துஆக்கள் தான் ஓதவேண்டும். பெருமானார் அவர்கள் தொழுகையின் இறுதியில் பிரார்த்தித்திருக்கிறார்கள். தோழர்களிடமும் அதைப் போன்று பிரார்த்திக்க ஏவியிருக்கிறார்கள். குறிப்பாக ஸுஜுதில் துஆ செய்வது மிக ஏற்றமானது. ஸுஜுதில் அதிகமாகப் பிரார்த்திப்பதைப் பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பியிருக்கிறார்கள். நிலையிலும், ருகூவிலும் கூடப் பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும். குர்ஆன் ஓதுவதும், திக்ரு செய்வதும் தொழுகையில் மிகச்சிறந்த கர்மங்களாக இருந்தும் கூட மனிதன் தன் இரட்சகனிடம் சிரம் பணிந்து பாவமன்னிப்புத் தேடுதல் சிலாகிக்கத் தக்கதாக கருதப்படுகிறது. Continue reading அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை