அத்தியாயம்-4. குடும்ப வாழ்வின் ஏனைய பகுதிகள்

நம்மிடம் வேலை செய்பவர்கள், நமது குடும்பத்தோடு இணைந்த ஏனைய உறுப்பினர்கள், உறவினர்கள், நம்மை அடுத்து வாழும் அண்டை வீட்டார்கள், இவர்களோடு நாம் அமைத்துக் கொள்ள வேண்டிய உறவின் முறையும் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடையதே. நிரந்தரமாக தங்களது வேலைகளுக்காக ஏவலர்களை அமர்த்தியிருப்பவர்கள், அந்த ஏவலர்களை தங்களுடைய சகோதரர்களைப்போல் நடத்திட வேண்டும் என்றும், அடிமைகளைப்போல் நடத்திடக் கூடாதென்றும் இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். ஏனெனில் யாரெல்லாம் தங்களுடைய ஏவலர்களை நல்ல முறையில் நடத்துகின்றார்களோ அவர்களது மரணத்தை இறைவன் மகிழ்ச்சியானதாகவும், எளிதானதாகவும் ஆக்கியருள்வான் என பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். Continue reading அத்தியாயம்-4. குடும்ப வாழ்வின் ஏனைய பகுதிகள்

[பாகம்-12] முஸ்லிமின் வழிமுறை.

சகோதரர்களிடம் நடந்து கொள்வது.

ஒரு முஸ்லிம் தன் தந்தையிடம் பிள்ளையிடமும் நடந்து கொள்ள வேண்டிய அதே ஒழுங்கோடு தன் சகோதரர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும். இது விஷயத்தில் அவர்கள் அனைவரும் சமம் என்று கருத வேண்டும். எனவே இளைய சகோதரர்கள் தம் மூத்த சகோதரர்களிடம் தம் தந்தையிடம் நடந்து கொள்வதைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். மூத்த சகோதரர்கள் தம் இளைய சகோதரர்களிடம் தம் தந்தையின் பிள்ளைகளிடம் நடந்து கொள்வதைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய உரிமைகள், கடமைகள், ஒழுக்கங்கள் ஆகிய எல்லா விஷயத்திலும் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் தாய் பிறகு உன் தந்தை பிறகு உனது சகோதரி பிறகு உனது சகோதரர் ஆகியோரிடத்திலும் பிறகு அடுத்தடுத்து வரக்கூடிய உன் நெருங்கிய உறவினரிடத்திலும் நீ நல்ல முறையில் நடந்து கொள். நூல்:பஸ்ஸார், தைலமி (இந்த ஹதீஸ் பலவீனமானது).

நூல்: முஸ்லிமின் வழிமுறை.

சந்தேகித்தல் உளவு பார்த்தல் பற்றி…

1660. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6066 அபூ ஹுரைரா (ரலி).

பொறாமை கொள்ளாதே.

1658. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6065 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1659. ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர் தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6077 அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி).

63.அன்சாரிகளின் சிறப்புகள்

பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776

ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்’ என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் சூட்டினான். (பஸராவில்) நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் (வந்து) சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அன்சாரிகளின் சிறப்புகளையும் அவர்களின் (தியாக) நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு எடுத்துரைப்பார்கள். என்னை அல்லது ‘அஸ்த்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை  நோக்கி, ‘உன் குலத்தார் இன்னின்ன நாளில் இன்னின்னவாறு செய்தார்கள்” என்று சொல்வார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3777

ஆயிஷா(ரலி) அறிவித்தார் ‘புஆஸ்’ போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும் அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) வந்தார்கள். எனவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காக) அல்லாஹ்தான், தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன் கூட்டியே நிகழச் செய்தான். Continue reading 63.அன்சாரிகளின் சிறப்புகள்