பிரார்த்தனையின் படித்தரங்கள் (3) இறுதி பகுதி!

புனிதமான மார்க்கம் நமது இஸ்லாம். இது இரு அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று: இறைவனுக்கு இணை துணை கற்பிக்காமல் வணக்க வழிபாடுகள் செலுத்துவது. இரண்டு: எப்படி அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்று நபிகள் காட்டித் தந்தார்களோ அப்படி அவனை வணங்குவது. இவ்விரு அடிப்படைகளையும் முழுமையாக நாம் எடுத்து செயல்படுவதினால் கலிமத்துஷ் ஷஹாதாவின் உண்மையான தாத்பரியத்தை மெய்ப்பித்தவர்களாக ஆக முடியும். இறைவன் அடியார்களின் இதயத்தால் பயந்து, வழிபட்டு, உதவிகோரி, நேசித்து, பெருமைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, ஆசைவைத்து நடக்கப்படக் கூடியவனாவான். இந்நிலையில் தான் உண்மையாக நாம் அவனை இறைவனாக ஏற்றிருக்கிறோம் என்பதை நிரூபிக்க முடியும். அல்லாஹ்வுக்கு என்னென்ன தன்மைகள், பாத்தியதைகள், உரிமைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதிலும் மனிதர்கள் கூட்டாக மாட்டார்கள். வணக்கமும் அல்லாஹ்வுக்குரியது. வேறு எவரும் வணங்கப்பட மாட்டார்கள். பிரார்த்தனைக்குரியவனும் அவனே. வேறு யாரும் பிரார்த்திக்கப்பட மாட்டார்கள். அவனையே அஞ்ச வேண்டும். வேறு சிருஷ்டிகளுக்கு அஞ்சக் கூடாது. Continue reading பிரார்த்தனையின் படித்தரங்கள் (3) இறுதி பகுதி!

நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?

நபி (ஸல்) அவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடுதல் அன்னார் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைக் கொண்டு பிரார்த்தித்தலும், சத்தியம் செய்து கேட்டலும் அவர்கள் இறந்ததற்கப்பால் அனுமதிக்கப் படாதது போன்று நபியவர்கள் மறைந்திருக்கும் போதும், அவர்கள் முன்னிலையில் வைத்தும் இப்படிச் செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில் நபிமார்களைப் போன்றுதான் மற்றவர்களும். இவர்களைக் கொண்டெல்லாம் வஸீலா தேடுவதை நபித்தோழர்களும், தாபியீன்களும்வழக்கமாக்கிக் கொள்ளவில்லை. Continue reading நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?