அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (2)

9. திருக்குர்ஆனே இஸ்லாமிய நாட்டின் அமைப்பு நிர்ணயச்சட்டம். எனினும் முஸ்லிம்கள் தங்களுடைய பொதுவான விவகாரங்களில் ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்தே செயல்பட்டிட வேண்டும். இது சட்டம் இயற்றும் சபைகளும், ஆலோசனை அவைகளும் ஏற்பட வழிவகுக்கின்றது. இந்த சபைகளும் அவைகளும் வட்டார, தேசிய, சர்வதேசிய அளவில் அமைந்திடலாம். இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் பொதுப்பிரச்சினைகளில் தங்களது சிறந்த ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். அவ்வாறு வழங்கிடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இந்தக் கடமையை ஒவ்வொரு குடிமகனும் நிறைவேற்றிட வகைசெய்யும் வகையில் ஆட்சியாளர் எல்லாப் பிரச்சினைகளிலும் நாட்டிலே இருக்கும் அறிஞர்களின் கருத்துக்களைக் கோரிப்பெற்றிட வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். அறிஞர்கள் அனுபவம் மிக்கவர்கள், இவர்களின் கருத்துக்கள் ஆட்சியாளருக்குப் பலன் பல பயக்கும். இப்படிக் கூறுவதனால் சராசரி குடிமகனுக்குத் தன் கருத்துக்களை வழங்கிடும் உரிமையில்லை என்று பொருள் கொண்டிடக் கூடாது. சூழ்நிலை வாய்க்கும் போதெல்லாம் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திடும் உரிமையும் கடமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. Continue reading அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (2)

அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-2)

11. இறைவன் தந்திருக்கின்ற வழிகாட்டுதல்களைக் கொண்டு, மனிதன் தன்னுடைய ஈடேற்றத்திற்கு தானே முயற்சிகளை மேற்கொண்டு வழிதேடிக் கொள்ள வேண்டும் என்று ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார்.

ஒருவர் தான் ஈருலக வாழ்விலும் வெற்றி பெறவேண்டும் என்றால் அவர் தனது நம்பிக்கை, செயல், நடைமுறை இவைகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு முயற்சிக்க வேண்டும். செயலில் இல்லாத நம்பிக்கை, நம்பிக்கை இல்லாத செயலைப்போன்று குறையுடையதாகும். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒருவன் இறைவனிடத்தில் வைக்கின்ற நம்பிக்கையை அவன் தனது அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தினாலன்றி அவன் ஈடேற்றமடைய முடியாது.

இஃது நம்பிக்கையின் ஏனைய பகுதிகளோடு ஈமானின் பிற பகுதிகளே முற்றாக பொருந்திப் போகின்றது. இறைவன் வெறும் வார்த்தைகளை மட்டும் பார்ப்பதில்லை என்பதையே இது காட்டுகின்றது. இன்னும், நம்பிக்கையை செயல்படுத்துவதில் உண்மையான நம்பிக்கையாளர் எவரும் அலட்சியமாக இருந்து விட முடியாது. அதோடு ஒருவர் இன்னொருவருக்காக செயல்படவோ அல்லது அவருக்காக இறைவனிடத்தில் முறையிடவோ முடியாது என்பதையும் இது காட்டுகின்றது. (சான்றாக திருக்குர்ஆனின் 10:9-10, 18:30, 103:1-3 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)

12. இறைவன், மனிதனுக்கு நேரிய வழியை காட்டியிருந்தாலன்றி அவனை அவனது செயல்களுக்கு பொறுப்பேற்கும்படி பணிக்கமாட்டான் என்பதை ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார்.

இதனால் தான் இறைவன் பல தூதர்களையும், வேத வெளிப்பாடுகளையும் அனுப்பினான். மனிதனுக்கு நேர்வழியை காட்டுவதற்கு முன்பும், எச்சரிக்கை கொடுப்பதற்கு முன்பும் தண்டனைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் இறைவன் தெளிவாக்கியிருக்கின்றான்.

இறைவனுடைய வழிகாட்டுதல்களை அறியாதவர்களும், இறைத்தூதர்களை அறியாதவர்களும், புத்தி சுவாதீனமில்லாதவர்களும் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படியத் தவறி விட்டால், அதற்காக அவர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. இறைவன் அவர்களை பொறுப்பாளிகளாக ஆக்குவதில்லை. இவர்கள் தங்களுடைய பொதுஅறிவு சொல்கின்றவற்றை செய்யாது விட்டால், அதற்காக மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இறைவனின் சட்டங்களை, கட்டளைகளை, அவனது வழிகாட்டுதல்களைத் தெரிந்திருந்தும் மீறுகின்றவர்கள் தண்டிக்கப்படுவார்கள். (சான்றாக அல்குர்ஆன்: 4:165, 5:16,21, 17:15)

இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். இஸ்லாத்தைப் பற்றி கேள்வியே பட்டிருக்காத மக்கள், அதனைப்பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத மக்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த மக்கள் நேர்மையான சிந்தனையுடையவர்களாக இருக்கலாம். இஸ்லாத்தை அறிந்திடும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் நல்ல முஸ்லிம்களாக ஆகலாம். இஸ்லாத்தை அவர்கள் அறியவில்லை என்றால், இஸ்லாத்தை அறிவதற்கு அவர்களுக்கு வாய்ப்பேதும் இல்லை என்றால், அவர்கள் முஸ்லிம்களாக இல்லாததற்கு அவர்கள் பொறுப்பாளியாக மாட்டார்கள்.

இஸ்லாத்தை சொல்லாலும், செயலாலும் இவர்களுக்கு எடுத்துச் சொல்லி அழைக்க தவறிவிட்டமைக்கு முஸ்லிம்களையே இறைவன் பொறுப்பாக்குவான். Continue reading அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-2)

குழப்பங்கள் கிழக்கிலிருந்து தோன்றுதல். குழப்பங்களின் நிலைகளில் சில.

1840. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியபடி, அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்” என்று சொல்ல கேட்டேன்.

புஹாரி : 7093 இப்னு உமர் (ரலி).

1841. தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாதவரை மறுமை நாள் வராது. ‘துல்கலஸா’ என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7116 அபூஹுரைரா (ரலி).

1842. ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, ‘அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராதவரை மறுமை நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7115 அபூஹுரைரா (ரலி).

1843. ”அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1596 அபூஹுரைரா (ரலி).

1844. கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3517 அபூஹுரைரா (ரலி).

1845. சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2928 அபூஹுரைரா (ரலி).

1846. (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இந்தக் குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3604 அபூஹூரைரா (ரலி).

1847. (தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்கமாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3027 அபூஹுரைரா (ரலி).

1848. (தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (தற்போதைய ரோமப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அதன் பிறகு சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் இறைவழியில் செலவழிப்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3121 ஜாபிர் இப்னு சமுரா (ரலி).

1849. யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், ஒரு கல்கூட, முஸ
்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு” என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3593 இப்னு உமர் (ரலி).

1850. இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாதவரை இறுதிநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

புஹாரி : 3609 அபூஹுரைரா (ரலி).

கடலலைகள் போல் குழப்பங்கள் பரவுதல்.

1837. நாங்கள் உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர் (ரலி) ‘நீர் அதற்குத் தகுதியானவர் தாம்’ என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன். அதற்கு உமர் (ரலி), ‘நான் இதைக் கருதவில்லை’ என்றனர். ‘கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால் முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன்’ என்று கூறினார்கள். இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என கூறினேன். ‘அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?’ என உமர் (ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். ‘அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது’ என்று உமர் (ரலி) கூறினார். ஷகீக் கூறினார். அந்தக்கதவு எதுவென உமர் (ரலி) அறிவார்களா? என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். ‘ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல் அதை உமர் (ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்’ என்று ஹுதைஃபா (ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹுதைஃபா (ரலி) ‘அந்தக் கதவு உமர் (ரலி) தாம்’ என்றார்கள்.

புஹாரி : 525 ஷகீக் (ரலி).

குழப்பங்கள் மிகுந்து காணப்படுதல்.

1832. நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, ‘நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக்கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!” என்று கூறினார்கள்.

புஹாரி : 1878 உஸாமா (ரலி).

1833. குழப்பங்கள் மிகுந்த அக்காலத்தில் அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவனை அது வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெறட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 3601 அபூஹுரைரா (ரலி).