ஷபாஅத்தின் வகைகள்

ஷபாஅத் என்னும் பரிந்துரைத்தல் இரு வகைப்படும். ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும், இவர்களைப் போன்ற அறிவீனமான மக்களிடையிலும் அறியப்பட்டிருந்த ஷபாஅத். இதை இறைவன் அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கி விட்டான். இரண்டு: அல்லாஹ்வின் அனுமதி பெற்றதன் பின்னர் கோரப்படும் ஷபாஅத். இதை அல்லாஹ் உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான். இந்த ஷபாஅத் அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் வழங்கப்படும். மறுமையில் சிருஷ்டிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்கும்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சமூகத்தில் வந்து அவன் முன்னிலையில் ஸுஜுதில் விழுந்து விடுவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் திறந்து கொடுக்கின்ற பாராட்டுரைகளால் அல்லாஹ்வைத் துதிப்பார்கள். பின்னர் தலையை ஸிஜுதிலிருந்து உயர்த்த, அல்லாஹ் அறிவிப்புக் கொடுத்து ஷபாஅத்துக்கு அனுமதி வழங்குவான். அதற்கொப்ப நபியவர்கள் ஷபாஅத் செய்வார்கள். (இது பற்றிய முழு விளக்கமும் முன்னர் வந்துள்ளது. ஹயாத்தாக இருக்கும் போது பெருமானாரிடம் பிரார்த்தனையை வேண்டுவதில் ஷிர்க் வந்து விடும் என்று பயப்படுவதற்கில்லை). Continue reading ஷபாஅத்தின் வகைகள்

இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது நபிகளைக்கொண்டு ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பது. இப்படி நடந்து அவனை நெருங்குவது. Continue reading இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

பாடம் – 2. பாடம் – 3

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து

1. வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதரும் நபிமார்களின் முத்திரையாகவும் வந்தார்கள் என்றும் உள்ளத்தில் விசுவாசம் கொண்டு நாவால் மொழிதல்.
2. ஐங்காலத் தொழுகையை தவறாது நிறைவேற்றல்.
3. ஜகாத் என்னும் ஏழை வரியை வருடம் தோரும் செலுத்துதல்.
4. ரமலான் மாதம் நோன்பு நோற்றல்.
5. வாழ்க்கையில் ஒரு முறையேனும் (வசதி இருப்பின்) ஹஜ் யாத்திரை செய்தல். Continue reading பாடம் – 2. பாடம் – 3

பாடம்-1

இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம்.

லா இலாஹ இல்லல்லாஹ் என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. அவையாவன மறுப்பதும் உறுதிபடுத்துவதுமாகும்.

முதலாவது:

எல்லாப் புகழுக்கும் உரிய அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்க்கும் தெய்வீகத் தன்மை கிடையாது என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறும் ஷஹாதா மறுக்கிறது. அல்லாஹ்வை அன்றி ஏனையவைகள் மலக்குகள், நபிமார்கள், ஏனைய மனித இனங்கள், சிலைகள், உலகின் அரசியல் சக்திகள் ஆகிய எவையும் தெய்வங்களுமல்ல, அவற்றிற்கு தெய்வீகத் தன்மையும் கிடையாது. இவை அனைத்தும் தெய்வ உருவில் இன்றும் உலகில் இருப்பதை இறை நம்பிக்கை சாட்சியம் மறுக்கவில்லை. மாறாக மனிதனால் அவற்றிற்கு அளிக்கப்பட்ட தெய்வீகத் தன்மையை இந்த ஷஹாதா மறுக்கிறது. Continue reading பாடம்-1