அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)

திருக்குர்ஆன் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பெற்ற மிகப்பெரிய பரிசாகும். அது தரும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது.

சுருக்கமாகச் சொன்னால் திருமறையின் நோக்கம், அதற்கு முன்னால் வந்த இறைவெளிப்பாடுகளைக் காத்து, இறைவனின் வழிகாட்டுதலை மனிதனுக்கு அறிவித்து, மனிதனை நேர்வழியின்பால் இட்டுச் செல்வதேயாகும். அத்துடன் மனிதனின் ஆன்மாவை ஈடேற்றத்தின்பால் கொண்டு செல்கின்றது. மனிதனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, மனிதனின் மனதை இருட்டிலிருந்து மீட்டி, வெளிச்சத்திற்கு கொண்டு செல்கின்றது.

திருக்குர்ஆன் இறைவனின் அருள் வாக்காகும். அது இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வானவர்கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாகும். அது போன்றதொன்றை ஆக்கிடுவதென்பது மனிதனின் கற்பனைக்குக்கூட எட்டாத ஒன்றாகும். Continue reading அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)

முத்தஸாபிஹாத் வசனங்கள் பற்றி….

அறிவு.

1705. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை” எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, ‘முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி :4547 ஆயிஷா (ரலி).

1706. உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5060 ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் (ரலி).

1707. அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2457 ஆயிஷா (ரலி).

கண் திருஷ்டிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.

1418. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி ‘கட்டளையிட்டார்கள்.

புஹாரி : 5738 ஆயிஷா(ரலி).

1419. நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

புஹாரி : 5739 உம்முஸலமா (ரலி).

விஷக்கடிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.

1416. ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 5741 அல் அஸ்வத் (ரலி).

1417. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்கும்போது ‘பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா வரீகத்து பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா” என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்… எங்கள் பூமியின் மண்ணும் எங்களில் சிலரின் உமிழ் நீரும் (கலந்தால்) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் உள்ள நோயாளியைக் குணப்படுத்தும்.)

புஹாரி : 5746 ஆயிஷா (ரலி).

பாதுகாப்பு தேடும் குர்ஆனிய வசனங்கள்.

1415. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால், ‘அல்முஅவ்விஃதாத்’ (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் சுபிட்சத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.

புஹாரி : 5016 ஆயிஷா (ரலி).