10.பாங்கு

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 603

அனஸ்(ரலி) அறிவித்தார். (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 604

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்க ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) ‘தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?’ என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். Continue reading 10.பாங்கு

பிரார்த்தனையின் படித்தரங்கள் (3) இறுதி பகுதி!

புனிதமான மார்க்கம் நமது இஸ்லாம். இது இரு அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று: இறைவனுக்கு இணை துணை கற்பிக்காமல் வணக்க வழிபாடுகள் செலுத்துவது. இரண்டு: எப்படி அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்று நபிகள் காட்டித் தந்தார்களோ அப்படி அவனை வணங்குவது. இவ்விரு அடிப்படைகளையும் முழுமையாக நாம் எடுத்து செயல்படுவதினால் கலிமத்துஷ் ஷஹாதாவின் உண்மையான தாத்பரியத்தை மெய்ப்பித்தவர்களாக ஆக முடியும். இறைவன் அடியார்களின் இதயத்தால் பயந்து, வழிபட்டு, உதவிகோரி, நேசித்து, பெருமைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, ஆசைவைத்து நடக்கப்படக் கூடியவனாவான். இந்நிலையில் தான் உண்மையாக நாம் அவனை இறைவனாக ஏற்றிருக்கிறோம் என்பதை நிரூபிக்க முடியும். அல்லாஹ்வுக்கு என்னென்ன தன்மைகள், பாத்தியதைகள், உரிமைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதிலும் மனிதர்கள் கூட்டாக மாட்டார்கள். வணக்கமும் அல்லாஹ்வுக்குரியது. வேறு எவரும் வணங்கப்பட மாட்டார்கள். பிரார்த்தனைக்குரியவனும் அவனே. வேறு யாரும் பிரார்த்திக்கப்பட மாட்டார்கள். அவனையே அஞ்ச வேண்டும். வேறு சிருஷ்டிகளுக்கு அஞ்சக் கூடாது. Continue reading பிரார்த்தனையின் படித்தரங்கள் (3) இறுதி பகுதி!

இறைவன் அனுமதித்தவை

எதை அல்லாஹ்வும், அவன் ரஸூலும் விலக்கினார்களோ அது ஹராம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அனுமதித்தவை அனைத்தும் ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் அல்லாஹ், ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். அவர்கள் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதை திருமறையும் விளக்குகிறது: “அவர்கள் (மெய்யாகவே) விசுவாசிகளாக இருந்தால் அவர்களைத் திருப்திப் படுவதற்கு அல்லாஹ்வும், ரஸூலும் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்)”. (9:62) Continue reading இறைவன் அனுமதித்தவை