அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

3. இஸ்லாமிய வரலாற்றை விமர்சிக்குமுன் அந்த வரலாற்று விற்பன்னர்கள் போரைப்பற்றியும், அமைதியைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்லுகின்றது என்பதை கூர்ந்து, நேர்மையான எண்ணத்தோடு படித்திடுவது நன்மை பல பயக்கும். இஸ்லாம் வெற்றிக்கொண்ட இடங்களிலெல்லாம் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதையும், முஸ்லிம்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இஸ்லாத்தோடு தொடர்பு கொண்ட பின்னர் அவர்கள் எய்திய நிலைகளையும் கூர்ந்து கவனிப்பது அந்த அரசியல் விமர்சகர்களுக்கு இன்னும் பல நன்மைகளைத் தரும். வேற்று நாட்டவர்களால் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் முஸ்லிம்களை அழைத்துத் தங்களை அந்த ஆதிக்கங்களிலிருந்து விடுவித்திட விடுத்த அபயக்குரலைப் படித்திடும்போது அவர்கள் (வரலாற்றாசிரியர்கள்) என்ன நினைப்பார்கள். முஸ்லிம்கள் வெற்றிபெற்ற இடங்களிலெல்லாம் அவர்களை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்ற காட்சிகளை கண்டிடும்போது, அந்நிய ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களை மீட்டிட்ட முஸ்லிம்களை பொதுமக்கள் மட்டுமல்ல, மதத்தலைவர்களும் வரவேற்றதை படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? முஸ்லிம்கள் அமுல்படுத்தும் நியதியின் கீழ்தான் தங்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று அழைத்த நிகழ்ச்சிகளைப் படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவற்றைப் பார்த்து திகைத்த அவர்கள் திரித்துக்கூற விரும்பினார்களேயன்றி உண்மையை உரைக்க முன்வரவில்லை. Continue reading அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (1)

முஸ்லிம்களால் மறக்கப்பட்டுவிட்ட – மற்றவர்களால் முற்றிலும் திரித்துக் கூறப்பட்டு வரும் இஸ்லாத்தின் சில பகுதிகள் குறித்து இங்கே விவாதிக்கப் போகின்றோம். இந்தப் பகுதிகள் பற்றிய உண்மையான விளக்கங்களைத் தந்திட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் மன்னிப்புக் கேட்பதைப் போன்றதொரு மனநிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். ஏனெனில் இஸ்லாம் இதை முற்றாக வெறுக்கின்றது. இன்னும் இஸ்லாத்தில் இதற்குத் தேவையில்லை. அதுபோலவே சிலரை முகஸ்துதி செய்திட வேண்டியதுமில்லை. சில, பலரைத் திருப்திபடுத்திட வேண்டியதுமில்லை. சிலரைச் சாடிட வேண்டியதுமில்லை. ஏனெனில் இஸ்லாம் இவை போன்றவற்றைச் சகித்துக் கொள்வதேயில்லை. இஸ்லாம் நம்மிடம் நேரிய எண்ணத்தையும், நேரிய செயல்களையும் எதிர்பார்க்கின்றது. துன்பங்கள் ஆயிரம் வரினும் அஞ்சாது நேர்மையைக் கடைபிடித்திட கட்டளையிடுகின்றது. Continue reading அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (1)

அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.

இஸ்லாம் மனிதனின் தனிவாழ்க்கைத் தூய்மை நிறைந்த ஒன்றாக இருந்திட வேண்டும் என விழைகின்றது. இந்த விதத்திலேயே தனது போதனைகளை அமைத்துத் தருகின்றது. மனிதன் ஆரோக்கியம் நிறைந்தவனாக இருந்திட, அவனுக்கு மிகவும் ஆரோக்கியமானதொரு உணவு திட்டத்தை அமைத்துத் தந்துள்ளது. தனிமனிதனின் ஒழுக்கம் மாசுபடாமல் இருந்திட, அவன் எவ்வாறு ஆடை அணிந்திட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. அவன் நித்திய வாழ்க்கையை எவ்வாறு நடத்திட வேண்டும் என்பதற்கான நிகழ்முறையை வகுத்துத் தந்துள்ளது. அவன் தனது அழகையும், அலங்காரத்தையும் எவ்வாறு கவர்ச்சிப் பொருளாக ஆக்கிடாமல் காத்திட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இவைகளை பின்வருமாறு பிரித்து ஆராயலாம்.

1. தூய்மை

2. உணவு

3. ஆடையும் அலங்காரமும்

4. விளையாட்டும் பொழுதுபோக்கும் Continue reading அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.

அத்தியாயம்-3 இறந்தோருக்கான தொழுகை (ஜனாஸா தொழுகை)

1. இறந்துபோன ஒரு முஸ்லிமுக்காக இறைவனைத் தொழுவது முஸ்லிம்களுடைய கூட்டுக் கடமையாகும். இந்தத் தொழுகையை இறப்பின்போது குழுமியிருக்கும் முஸ்லிம்கள் நிறைவேற்றினால் போதுமானது. குழுமியிருப்பவர்களில் சிலர் இந்தத் தொழுகையை நிறைவேற்றினாலும் போதுமானது.

2. இறந்தவரின் உடலை சோப்பு அல்லது அழுக்கு நீக்கும் பொருள்களால் சில தடவைகள் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். உடலை முற்றிலும் சுத்தப்படுத்திய பிறகு வெண்மையான பருத்தி துணிகளால் மூட வேண்டும். Continue reading அத்தியாயம்-3 இறந்தோருக்கான தொழுகை (ஜனாஸா தொழுகை)

அத்தியாயம்-3 தொழுகையின் விதிகள்

குறைத்து தொழுதல்

1. ஒருவர் தனது ஊரிலிருந்து நாற்பத்தெட்டு மைல்கள் அல்லது அதற்கு மேலே தொடர்ந்து செல்லும் எண்ணத்தோடு பயணம் செய்யும்போது அவர் நான்கு ரக்அத்துகள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாகக் குறைத்து தொழுது கொள்ள வேண்டும். இந்த சலுகை லுஹர், அஸர், இஷாத் தொழுகைகளுக்குப் பொருந்தும். பஜ்ரு, மஃரிப் ஆகிய தொழுகைகளை குறைத்துத் தொழ முடியாது. Continue reading அத்தியாயம்-3 தொழுகையின் விதிகள்