அத்தியாயம்-8. திருமணமும் – மணவிலக்கும். (MARRIAGE AND DIVORCE)

இஸ்லாம் தரும் கொள்கைகளுள் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை அல்லது மிகவும் திரித்துக் கூறப்பட்டு வருபவை திருமணத்தைப் பற்றி இஸ்லாம் தரும் கொள்கைகளாகும். திருமணங்கள் குறித்து இஸ்லாம் தரும் விளக்கங்களை வெவ்வேறு தரப்பினரும் தங்களது விருப்பம்போல் விமர்சித்து வருகின்றார்கள். அவர்களுக்கு இஸ்லாம் எந்த நோக்கத்தோடு அணுகுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுவது நிறைந்த பலனைத் தரலாம். ஆகவே இதுகுறித்து நாம் ஏற்கனவே தந்த விளக்கங்களுடன் இன்னும் சில விளக்கங்களை இங்கே தருகின்றோம்.

இஸ்லாத்தில் திருமணங்கள் என்பவை இலாபத்தை நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் ஒப்பந்தங்கள் அல்ல. யார் யார் எவ்வளவு பொருள்களை (’சீர்’ வரிசைகளை) தர வேண்டும், அதற்காக அடுத்தவர்கள் என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் பட்டியல் போட்டுக்காட்டும் உலகாதாய ஒப்பந்தங்களும் அல்ல. நாம் பின்பற்றி வாழும் மதத்திற்கும் திருமண ஒப்பந்தங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதும் இஸ்லாத்தின் கருத்தல்ல.

திருமணங்கள் புனிதமானவை. அதை உலகியல் இலாபங்களின் அடிப்படையிலிருந்து விமர்சித்திடுவது முறையாகாது. Continue reading அத்தியாயம்-8. திருமணமும் – மணவிலக்கும். (MARRIAGE AND DIVORCE)

அத்தியாயம்-4. பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவு.

குழந்தைகளின் உரிமைகளும் பெற்றோரின் கடமைகளும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறையை சில கொள்கைகளாகச் சுருக்கலாம். முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது.  இரண்டாவதாக பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது.

சில நேரங்களில், பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பில் அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியமாகவும் இருந்திடுவதுமுண்டு. இந்த உண்மைகளை இஸ்லாம் நன்றாகக் கவனத்தில் கொள்ளுகின்றது. Continue reading அத்தியாயம்-4. பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவு.

அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

(*இஸ்லாத்தின் குடும்ப அமைப்பு’ என்ற ஆசிரியரின் விரிவான நூலின் சுருக்கமே இங்கே ‘குடும்ப வாழ்க்கை’ என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகின்றது.)

’குடும்பம்’ என்பதற்கு பல்வேறு இலக்கணங்களும் வரையறைகளும் தரப்பட்டுள்ளன. இங்கே நாம் அவைகளில் எளிமையான இலக்கணமொன்றை எடுத்துக்கொண்டு நமது விவாதத்தைத் தொடருவோம்.

’குடும்பம்’ என்பது ஒரு மனித சமூகக்கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள் என்பவைகளால் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்கள். இந்தக் குடும்பபந்தம் ஒருவர் மற்றவருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் கொண்டதாகும். இந்த உரிமைகளும் கடமைகளும் மார்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டு, குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களால் கடைபிடிக்கப்படுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதல், சிறுவர்களிடம் கருணை காட்டுதல், முதியவர்களிடம் மரியாதை காட்டுதல், முதியவர்களைப் பாதுகாத்தல், குடும்பம் சுமூகமாக நடந்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளில் அடங்கும். Continue reading அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

[பாகம்-16] முஸ்லிமின் வழிமுறை.

உறவினர்களுடன் நடந்து கொள்வது.

ஒருமுஸ்லிம் தன் பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள் ஆகியோரிடம் எப்படி நடந்து கொள்வானோ அதுபோன்றே தனது இரத்த பந்தமுடையவர்களுடனும் உறவினர்களுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

தன் பெற்றோரிடம் நடந்து கொள்வது போலவே தன் பெற்றோரின் சகோதர, சகோதரிகளுடன் நடந்து கொள்ள வேண்டும். அதாவது தன் தாயின் சகோதரிகளுடனும் தந்தையின் சகோதரிகளுடனும் தாயிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும். தன் தந்தையின் சகோதரர்களுடனும் தாயின் சகோதரர்களுடனும் தந்தையிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும்.

இரத்த பந்தமுடையவர்கள் முஃமின்களாக இருந்தாலும் காஃபிர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் இரத்தபந்தமுடையவர்களாகவே கருத வேண்டும். அவர்களுடன் இணைந்து வாழ்வதும் அவர்களுக்கு நன்மையும் நல்லுபகாரமும் செய்வதும் கடமையாகும்.

அவர்களில் பெரியவர்களைக் கண்ணியப் படுத்தவேண்டும். சிறியவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் நோயுற்றால் அவர்களை நோய் விசாரிக்கச் செல்ல வேண்டும். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்ல வேண்டும். அவர்கள் உறவை முறித்தாலும் அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்கள் கடினமாக நடந்து கொண்டாலும் அவன் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. Continue reading [பாகம்-16] முஸ்லிமின் வழிமுறை.

உறவுகளைப் பேணுதல்.

1655. அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘என்ன?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்”என்று கூறியது. ‘உன்னை(உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ் ‘இது (அவ்வாறுதான்) நடக்கும்” என்று கூறினான். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), ‘நீங்கள் விரும்பினால் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 4830 அபூஹூரைரா (ரலி).

1656. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5984 ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி).

1657. ”ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்” என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2067 அனஸ் இப்னு மாலிக் (ரலி).