அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.

இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில:

1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே!

2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான். Continue reading அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.

அல்லாஹ் தன் அடியானை எச்சரிக்கும் பல வகையான மன இச்சைகள்!

2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும். அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.

3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. Continue reading அல்லாஹ் தன் அடியானை எச்சரிக்கும் பல வகையான மன இச்சைகள்!

நபிமார்களின் தன்மைகளுக்கும், அல்லாஹ்வின் தன்மைகளுக்குமிடையில் உள்ள வித்தியாசம்

நபிமார்கள் இறைதூதர்களாவார்கள். அல்லாஹ்வின் ஏவல்கள், விலக்கல்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், மற்றும் செய்திகள் அனைத்தையும் நம்மீது எத்தி வைக்கும் இடையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தையும் உண்மையென ஏற்று, அவற்றிற்கொப்ப வழிபட்டு செயல்படுதல் நம்மீது கடமையாகும். எந்த விதமான வேற்றுமையும் காட்டாமல் இவ்விதமாக நபிமார்கள் அனைவரைக் கொண்டும் விசுவாசம் கொள்ள வேண்டும். எந்த ஒரு நபியையும் ஒருவன் ஏசினாலும் அப்படி ஏசுபவன் காஃபிராகி விடுவதுடன் முர்தத்தான (மதம் மாறிய)வனுடைய சட்டம் இவன் மீது அமுல் படுத்தப்பட்டு மரண தண்டனைக்கு ஆளாவான். Continue reading நபிமார்களின் தன்மைகளுக்கும், அல்லாஹ்வின் தன்மைகளுக்குமிடையில் உள்ள வித்தியாசம்

சன்மார்க்கம்!

மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே இல்லை. இறைவனை நெருங்கிய நல்மக்கள் இப்பாதையைப் பின்பற்றினர். இதனால் அவர்கள் வெற்றியடைந்து ஜெயசீலர்களாகவும் திகழ்ந்தனர். இப்பாதையை கடைபிடித்தொழுகிய அல்லாஹ்வின் படைகள் அவன் பாதையில் போராடி பெரும் வெற்றிகளை ஈட்டினார்கள். இதற்கு நேர்முரணாக எவர்கள் நடப்பார்களோ அவர்களெல்லாம் வழி தவறி நெறி கெட்ட பாதையில் சென்று விடுகிறார்கள். இதனால் இம்மை, மறுமை ஆகிய ஈருலகில் வேதனைக்கும் சோதனைக்கும் ஆளாகி விடுகின்றனர். Continue reading சன்மார்க்கம்!