அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

(*இஸ்லாத்தின் குடும்ப அமைப்பு’ என்ற ஆசிரியரின் விரிவான நூலின் சுருக்கமே இங்கே ‘குடும்ப வாழ்க்கை’ என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகின்றது.)

’குடும்பம்’ என்பதற்கு பல்வேறு இலக்கணங்களும் வரையறைகளும் தரப்பட்டுள்ளன. இங்கே நாம் அவைகளில் எளிமையான இலக்கணமொன்றை எடுத்துக்கொண்டு நமது விவாதத்தைத் தொடருவோம்.

’குடும்பம்’ என்பது ஒரு மனித சமூகக்கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள் என்பவைகளால் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்கள். இந்தக் குடும்பபந்தம் ஒருவர் மற்றவருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் கொண்டதாகும். இந்த உரிமைகளும் கடமைகளும் மார்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டு, குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களால் கடைபிடிக்கப்படுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதல், சிறுவர்களிடம் கருணை காட்டுதல், முதியவர்களிடம் மரியாதை காட்டுதல், முதியவர்களைப் பாதுகாத்தல், குடும்பம் சுமூகமாக நடந்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளில் அடங்கும். Continue reading அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

அத்தியாயம்-2 இஸ்லாம் அமைத்துத்தரும் சமுதாயம்.

சமுதாயம் என்ற சொல்லுக்கு மிக விரிந்த விளக்கங்கள் உண்டு. நாம் சமுதாய அமைப்பின் அடிப்படைகளையே இங்கே எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம். ஆகவே சமுதாய அமைப்பின் அடிப்படைகளை மட்டும் எடுத்துச் சொல்லும் சில இலக்கணங்களை மட்டுமே இங்கே தருகின்றோம்

சமுதாயம் என்பது எல்லாவகையான உறவுகளையும் உள்ளடக்கியதாகும். அது தனி மனிதர்களுக்கிடையே ஏற்படும் அந்தரங்கமான உறவுகள், உணர்வுகள், ஒழுக்கக் கடமைகள், சமூக பிணைப்பு இவைகளை குறிப்பதாகும். இந்த உறவு ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் காணப்படலாம். ஒரே தேசத்தைச் சார்ந்த மக்களிடையே காணப்படலாம். ஒரே தொழிலைச் செய்பவர்களிடையே காணப்படலாம். இதனுடைய மிகச் சிறிய எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தைக் குறிப்பிடலாம்………….. (Nisbet pp. 74-8) Robert Nisbet. The Sociological Tradition (Newyork: basic Books, 1966) Continue reading அத்தியாயம்-2 இஸ்லாம் அமைத்துத்தரும் சமுதாயம்.

அத்தியாயம்-2 ’பாபம்’ – இஸ்லாத்தின் பார்வையில்.

’பாபம்’ என்ன என்பதை புரிந்து கொள்வதில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன. பாபம் முதன்முதலில் ஆதம், ஹவ்வா என்ற ஆதிப் பெற்றோர்கள் சுவர்க்கத்தில் இருக்கும் போதுதான் ஆரம்பமானது எனக் கருதப்பட்டு வருகின்றது. அங்கே நடந்த பாப சம்பவம்தான் அவர்களை அங்கே இருந்து கீழே (பூமிக்கு)) தள்ளியது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதர்கள் அனைவரும் பாவிகள் என அழைக்கப்படுகின்றார்கள். இப்படி மனிதர்கள் பாபம் எதுவும் செய்யாதபோது, அவர்கள் பாவிகள் என்று அழைக்கப்படுவது எண்ணற்ற குழப்பங்களை விளைவித்தது.

ஆனால் இஸ்லாம் இந்தக் குழப்பங்களுக்கு அப்பாற்பட்டது. இஸ்லாம் இதுவரை எந்தக் கோட்பாடும் தராததொரு கோட்பாட்டை தருகின்றது. அதுவே உண்மை நிறைந்தது.

திருமறை பின்வருமாறு கூறுகின்றது: ஆதம், ஹவ்வா ஆகிய இருவரையும் இறைவன் சுவர்க்கத்தில் இருக்கும்படியும், அங்கு கிடைப்பவற்றை புசிக்கும்படியும் பணித்தான். அங்கு அவர்களுக்கு இறைவனின் அருள் கொடைகளை பூரணமாக அள்ளித் தருவதாகவும் இறைவன் வாக்களித்தான். அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு தடையையும் விதித்தான். அதாவது அவர்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் பக்கம் போகக்கூடாது என்பதே அந்தத்தடை. பின்னர் ஷைத்தான் அவர்களைத் தூண்டி அவர்கள் அந்த சுகவாழ்வை இழக்கும்படிச் செய்தான். பின்னர் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். பூமியில் வாழ்ந்து, இறந்து, மீண்டும் இறுதித் தீர்ப்பு நாளில் எழுப்பப்படக் கூடியவர்களாக ஆயினர். தங்களது தவறை உணர்ந்த அவர்கள் இறைவனிடம் இறைஞ்சினார்கள். இறைவனும் மன்னித்தான். (அல்குர்ஆன்: 2:35-38, 7:19-25, 19:25, 20:117-123)

மேலே விவரித்த சம்பவம் எண்ணற்ற உண்மைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மனிதனின் ஆசைகளுக்கு முடிவே இல்லை. சுவர்க்கத்தையே அவன் முன் கொண்டு வந்தால்கூட அவன் திருப்தி அடைவதில்லை. ஆதம், ஹவ்வா ஆகியோர்கள் செய்ததைப்போல் ஒரு தவற்றினை செய்து விடுவது மனிதனின் மனதை மரத்துப்போக செய்வதில்லை. அவன் ஆன்மீக உயர்நிலைகளை அடைய முடியாமல் அவைகள் தடுத்திடுவதில்லை. அவன் ஒழுக்க நிலைகளில் உயர்வதற்கு அவை தடையாக அமைவதுமில்லை. மனிதனின் அறிவும், மனமும் பாவத்தை உணர்ந்து கொள்ளும் தன்மை உடையவையே! அவைகள் அவன் செய்யும் தவறுகளையும் உணர்ந்து கொள்ளும். அவனது குறைகளையும் அவைகள் உணர்ந்து கொள்ளும். இவற்றையெல்லாம் விட அவை யாரிடம் அவன் தனது தவறுகளை பொறுத்தருளும்படி இறைஞ்சிட வேண்டும் என்பதை உணர்த்தும் தன்மை படைத்தவைகளே! அதேபோல் யாரிடம் மனிதன் தனக்கு நேர்வழி காட்டும்படி கோரிட வேண்டும் என்பதையும் அவனுக்குச் சொல்லி விடும் மனிதனின் அறிவும், மனமும். Continue reading அத்தியாயம்-2 ’பாபம்’ – இஸ்லாத்தின் பார்வையில்.

கப்றும் திருவிழாக்களும்

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்)

தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. Continue reading கப்றும் திருவிழாக்களும்