Tag Archives: ஆதரவு

அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (1)

மனிதனின் சமுதாய வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றைப் போலவே மனிதனின் அரசியல் வாழ்வையும் இஸ்லாம் சில உயர்ந்த ஒழுக்க, ஆன்மீக அடிப்படைகளின் கீழ் அமைத்துத் தருகின்றது. வாழ்வின் ஏனையத் துறைகளைப்போலவே இதற்கும் தெளிவான இறைக்கட்டளைகள் இருக்கவே செய்கின்றன. இந்த இறைக்கட்டளைகளின் படியே ஒரு முஸ்லிமின் அரசியல் வாழ்க்கை அமைக்கப்பட வேண்டும்.

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

இஸ்லாத்தின் அடிப்படைகள்

தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

மஸ்ஜிதுன் நபவிக்குப் பயணமாகுதல்

நேர்ச்சைகள் செய்வது கடனைப் போன்றதாகும். கடனை திருப்பி ஒப்படைப்பது கட்டாயமாவதைப் போல நேர்ந்த கடன்களையும் திருப்ப வேண்டுமென அனைத்து இமாம்களும் கூறியிருக்கிறார்கள். எனவே நபியவர்களின் கப்றை நோக்கிப் பிரயாணம் செய்ய வேண்டுமென்று ஒருவர் நேர்ந்தால் அல்லது மற்ற நபிமார்கள், நன்மக்கள் ஆகியோருடைய கப்றுகளில் ஏதேனுமொன்றுக்குப் போக வேண்டுமென்று நேர்ந்தால் அதை நிறைவேற்றுதல் அவசியமில்லை. மாறாக அதை … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

குறிப்பு (3)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

குறிப்பு (2)

அல்லாஹ்விடம் அவன் படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் சென்று அவற்றைக் காரணம் காட்டியும், அவற்றைப் பொருட்டாகக் கொண்டும் கேட்பது விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே மக்களில் பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment