அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை.

1. வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குச் செல்வது போலவே தன்னிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். இறைவனின் இல்லமாம் பள்ளிவாசலிலோ அல்லது தொழுகைக்காக கூடியுள்ள இடத்திலோ தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன், இறைவனைப் புகழ்ந்து கூறும் ‘தக்பீர்’ஐ சொல்ல வேண்டும்.

2. பெருநாள் தொழுகையை சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடையிலுள்ள நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு பாங்கு சொல்லவோ இகாமத் சொல்லவோ தேவையில்லை. பெருநாள் தொழுகைக்கு இரண்டு ரக்அத்களே உண்டு. ஒவ்வொரு ஸூராவிலும் இமாம் பாத்திஹா ஸூராவையும் குர்ஆனின் ஒரு பகுதியையும் உரக்க ஓதுவார்.  Continue reading அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை.

அத்தியாயம்-3 தொழுகையின் நிபந்தனைகள்

தொழுகை முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்:

1. புத்தி சுவாதீனமுள்ளவர்கள் அனைவரும் தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும்.

2. ஓரளவுக்கு மனப்பக்குவம் அடைந்தவரும், வயதுக்கு வந்தவர்களும் (பொதுவாக பதினான்கு வயது) தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும்.

குழந்தைகள் ஏழு வயதை அடைந்தவுடன் தொழும்படி பெற்றோர்கள் அறிவுரை கூற வேண்டும். பத்து வயதை அடைந்தவுடன் அதனை கட்டாயப்படுத்த வேண்டும்.

3. கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களும், மாதவிடாய் காலத்திலிருக்கும் பெண்கள், (அதிகமாகப் பத்து நாட்கள்) மகப்பேறு காலத்திலிருக்கும் பெண்களும் (அதிகமாக நாற்பது நாட்கள்) தொழுகையை நிறைவேற்ற வேண்டாம். Continue reading அத்தியாயம்-3 தொழுகையின் நிபந்தனைகள்

[பாகம்-14] முஸ்லிமின் வழிமுறை.

கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்.

மனைவி விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களை மேற்கொள்வது கடமையாகும்.

1. அவளுடன் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தவேண்டும். “அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 4:19)

அவன் உண்ணும்போது அவளுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அவன் ஆடை அணியும்போது அவளுக்கும் அணியக் கொடுக்க வேண்டும். தனக்கு அவள் மாறு செய்து விடுவாளோ என்று அஞ்சினால் அவளை எவ்வாறு பக்குவப்படுத்த வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவ்வாறு அவளை பக்குவப்படுத்த வேண்டும்.

முதலில் அவளைத் திட்டாமல், ஏசாமல், கேவலப்படுத்தாமல் அவளுக்கு அறிவுரை கூறவேண்டும். அதற்கவள் கட்டுப்படவில்லையென்றால் படுக்கையிலிருந்து அவளை ஒதுக்கி வைக்க வேண்டும். அதற்கும் கட்டுப்படவில்லை என்றால் காயம் ஏற்படாதவாறு அவளை அடிக்க வேண்டும். முகத்தில் அடிக்கக்கூடாது. அடிக்கும்போது இரத்தம் வந்து விடக் கூடாது. அவையங்களுக்குக் கேடு வந்து அவை செயல்பாடுகளை இழந்துவிடக் கூடாது. Continue reading [பாகம்-14] முஸ்லிமின் வழிமுறை.

77. ஆடை அணிகலன்கள்

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5783

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5784

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்’ என்று கூறினார்கள். Continue reading 77. ஆடை அணிகலன்கள்

வஹியின் போது….

1505. ‘ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவு படுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்து விடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்’ என ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார். மேலும்,”கடும் குளிரான நாள்களில் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி (ஸல்) அவர்களை விட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்” என ஆயிஷா (ரலி) கூறினார்.

புஹாரி : 2 ஆயிஷா (ரலி).

1506. நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதை விட அழகான ஆடையை நான் கண்டதேயில்லை.

புஹாரி : 3551 பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1507. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை.

புஹாரி : 3549 பராஉ பின் ஆஸிஃப் (ரலி).