அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (2)

திருக்குர்ஆன் செல்வம் மனிதனுக்கு ஒரு சோதனை என்றும், அது மனிதனுக்கு அடுத்தவர்களைச் சுரண்டுவதற்கோ, செல்வந்தன் என்ற செருக்கினால் மமதைக் கொண்டிடவோ அல்ல என்றும் கூறுகின்றது. இறைவன் சொல்கின்றான்:

(அல்லாஹ்வாகிய) அவன்தான் உங்களைப் பூமியில் (தன்) பிரதிநிதிகளாக ஆக்கியுள்ளான். அன்றி, உங்களில் சிலரை மற்றோரைவிடப் பதவிகளில் உயர்த்தியுமிருக்கின்றான். இதன் மூலம் உங்களுக்குக் கொடுத்தவற்றில் (செல்வங்களில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிக்கின்றான். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும் நிச்சயமாக அவன் மிகப் பிழைபொறுப்போனும் பேரன்பு உடையோனுமாவான். (திருக்குர்ஆன்: 6:165) Continue reading அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (2)

முஸ்லிம்களில் ஒருபால் உறவுக்காரர்களா? அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள்

பிரிட்டனில் அண்மைய காலமாக ஒரு சில ஒருபால் உறவுக்காரர்கள் இடையில் நிக்காஹ்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

ஒருபால் உறவு என்பது கிட்டத்தட்ட முஸ்லிம் உலகம் முழுக்கவுமே முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது – அறவே இடமில்லை என்ற ஒரு விவகாரமே இருந்து வருகிறது.

பிரிட்டனை எடுத்துக்கொண்டால், மற்ற சமூகங்களில் உள்ள ஒருபால் உறவுக்காரர்கள், சம உரிமைகளைப் பெறுவதில் கணிசமான தூரம் பயணித்துள்ளார்கள் என்றாலும், பிரிட்டிஷ் முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருபால் உறவுக்காரர்களோ பெரும்பாலும் தங்களது சுய அடையாளத்தைக்கூட வெளிப்படுத்தாமல் இருந்து வருகின்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது.

சமூகத்தால் ஒதுக்கப்படுவோமோ, இழிவுபடுத்தப்படுவோமோ, தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவோமோ என்ற அச்சம் காரணமாகவே ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் தம்முடைய பாலியல் நாட்டத்தை வெளியில் சொல்லாமல் மூடிவைத்திருக்கின்றனர்.

ஆனால் தாம் உறவுக்காரர்கள் என்று வெளிப்படையாக அறிவிக்கின்ற முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வேறு விதமான அழுத்தங்களை எதிர்கொள்கிறர்கள்.

பிரிட்டனில் நாஸ் என்ற அரசு சார தொண்டு நிறுவனம் தெற்காசிய பூர்வீகம் கொண்ட பிரிட்டிஷ் ஒருபால் உறவுக்காரர்களுக்கு உதவிவருகிறது.

தமது அமைப்பின் உதவியை நாடுவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காகி விட்டது என்று நாஸ் அமைப்பைச் சேர்ந்த ஆஸிஃப் குரெய்ஷி கூறினார்.

ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் நிக்காஹ் – திருமண உடன்படிக்கை செய்துகொண்டு தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.

ஒரு சில இமாம்களும் இதற்கு உடன்படும் ஒரு நிலை ஆரம்பித்துள்ளது.

பெருமளவில் வெளியில் வராமல் இருந்து விடுகிறார்கள் என்றாலும்கூட, ஒருபால் உறவுக்கார முஸ்லிம்களிடையில் இஸ்லாமிய முறையில் திருமணம் நடக்கிறது என்றால், இஸ்லாத்தையும் ஒருபால் உறவுக்காரர்களின் பாலியல் தெரிவையும் ஒத்துப்போகவைக்க இந்த இமாம்கள் ஏதோ ஒருவகையில் பங்காற்றுகின்றனர் என்பது விளங்குகிறது.

நன்றி: BBC Tamil

மேலுள்ள செய்தி இஸ்லாத்தைப் பூரணமாக அறிந்த முஸ்லிம்களுக்கு நிச்சயம் பாரதூரமான செய்தியாகவே இருக்கும். இறை வேதத்தை அல்லாஹ் நாடிய அளவு கற்றவர்கள் நிச்சயம் இந்த செயல் இறை வரம்பை மீறுதல் என்றே கவலைக் கொள்வர். இந்த ஒருபால் சேர்க்கை செயலை சரிகாணும் இவர்கள் நிச்சயம் பெயரளவிலான முஸ்லிம்களே. சரி இஸ்லாத்தை விளங்கிய இமாம்கள் எவ்வாறு இதற்கு துணைப்போக முடியும்? நிச்சயம் இந்த இமாம்கள் லூத் (அலை) அவர்களின் மனைவியின் பண்பைச் சேர்ந்தவர்களாகவே கருத வேண்டும். Continue reading முஸ்லிம்களில் ஒருபால் உறவுக்காரர்களா? அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

92. குழப்பங்கள் (சோதனைகள்)

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7048

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகை விட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்’ என்று கூறப்படும்.

இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் ‘அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்’ என்று பிரார்த்திப்பார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7049

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டு வரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். உடனே நான், ‘என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்’ என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், ‘இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது’ என்று கூறுவான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். Continue reading 92. குழப்பங்கள் (சோதனைகள்)

குழப்பங்கள் மிகுந்து காணப்படுதல்.

1832. நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, ‘நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக்கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!” என்று கூறினார்கள்.

புஹாரி : 1878 உஸாமா (ரலி).

1833. குழப்பங்கள் மிகுந்த அக்காலத்தில் அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவனை அது வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெறட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 3601 அபூஹுரைரா (ரலி).

43.கடன்

பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2385

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம் (விற்று விடுகிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கே அதை விற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் மறுநாள் நான் அவர்களிடம் ஒட்டகத்துடன் சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்து விட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2386

அஃமஷ்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் ‘ஸலம்’ முறையில் (பிறகு பணம் தருவதாகக் கூறி) பொருளை வாங்கும்போது அடைமானம் வைப்பது குறித்துப் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதனிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம் தருவதாகக்) கூறி உணவு தானியத்தை வாங்கினார்கள். அவனிடம் (அதற்காக) இரும்புக் கவசம் ஒன்றை அடைமானம் வைத்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2387

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Continue reading 43.கடன்