அத்தியாயம்-2 இஸ்லாம் தரும் சமத்துவம்.

சமத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும். இஸ்லாம் தரும் சமத்துவத்தைக் குறிப்பிட சமத்துவம் என்ற வார்த்தையைவிட ‘நியாயம், நேர்மை’ என்ற வார்த்தைகளே பொருத்தமானதாக அமையும். It is Not Equality But Equit. இங்கே சமத்துவம் என்பதை ஒரே மாதிரியானது அல்லது ஒன்றைப்போல் மற்றொன்று என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. இஸ்லாம், இறைவனின் முன் அனைவரும் ‘சமம்’ எனக் கூறுகின்றது. இதற்கு மனிதர்கள் தங்களுக்குள் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று பொருளல்ல. மனிதர்கள், தங்கள் திறமைகளால், தகுதிகளால், அவர்கள் கொண்டிருக்கும் ஆசைகளால், செல்வங்களால் வேறுபட்டு நிற்பவர்களே. ஆனால் இவைகளில் எதுவும் ஒரு மனிதனின் அந்தஸ்தை இன்னொரு மனிதனின் அந்தஸ்திலிருந்து உயர்த்தி விடாது. அதுபோலவே இவைகளில் எதுவும் ஒரு இனத்தை இன்னொரு இனத்தை விட உயர்ந்ததாக ஆக்கிவிடாது.

மனிதனின் கோத்திரம் அல்லது குலம், மனிதனின் நிறம், மனிதன் பெற்றிருக்கும் செல்வங்கள், அவன் சமுதாயத்தில் வகிக்கும் அந்தஸ்து இவைகளில் எதுவும் இறைவன் முன் ஒரு மனிதனைவிட இன்னொரு மனிதனை உயர்ந்தவனாக ஆக்கிடாது. இறைவன் இவைகளை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளை ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அளக்கின்ற அளவுகோல் அவர்கள் கொண்டுள்ள இறையச்சமேயாகும். இறையச்சத்தின் அடிப்படையிலிருந்து இறைவன் மனிதர்களுக்கிடையில் எந்த பாகுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அவர்கள் செய்கின்ற நற்செயல்களையும், தீய செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே பிரித்தறிகின்றான். இதனை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது: Continue reading அத்தியாயம்-2 இஸ்லாம் தரும் சமத்துவம்.

92. குழப்பங்கள் (சோதனைகள்)

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7048

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகை விட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்’ என்று கூறப்படும்.

இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் ‘அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்’ என்று பிரார்த்திப்பார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7049

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டு வரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். உடனே நான், ‘என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்’ என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், ‘இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது’ என்று கூறுவான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். Continue reading 92. குழப்பங்கள் (சோதனைகள்)