அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (2)

9. திருக்குர்ஆனே இஸ்லாமிய நாட்டின் அமைப்பு நிர்ணயச்சட்டம். எனினும் முஸ்லிம்கள் தங்களுடைய பொதுவான விவகாரங்களில் ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்தே செயல்பட்டிட வேண்டும். இது சட்டம் இயற்றும் சபைகளும், ஆலோசனை அவைகளும் ஏற்பட வழிவகுக்கின்றது. இந்த சபைகளும் அவைகளும் வட்டார, தேசிய, சர்வதேசிய அளவில் அமைந்திடலாம். இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் பொதுப்பிரச்சினைகளில் தங்களது சிறந்த ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். அவ்வாறு வழங்கிடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இந்தக் கடமையை ஒவ்வொரு குடிமகனும் நிறைவேற்றிட வகைசெய்யும் வகையில் ஆட்சியாளர் எல்லாப் பிரச்சினைகளிலும் நாட்டிலே இருக்கும் அறிஞர்களின் கருத்துக்களைக் கோரிப்பெற்றிட வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். அறிஞர்கள் அனுபவம் மிக்கவர்கள், இவர்களின் கருத்துக்கள் ஆட்சியாளருக்குப் பலன் பல பயக்கும். இப்படிக் கூறுவதனால் சராசரி குடிமகனுக்குத் தன் கருத்துக்களை வழங்கிடும் உரிமையில்லை என்று பொருள் கொண்டிடக் கூடாது. சூழ்நிலை வாய்க்கும் போதெல்லாம் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திடும் உரிமையும் கடமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. Continue reading அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (2)

அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

(*இஸ்லாத்தின் குடும்ப அமைப்பு’ என்ற ஆசிரியரின் விரிவான நூலின் சுருக்கமே இங்கே ‘குடும்ப வாழ்க்கை’ என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகின்றது.)

’குடும்பம்’ என்பதற்கு பல்வேறு இலக்கணங்களும் வரையறைகளும் தரப்பட்டுள்ளன. இங்கே நாம் அவைகளில் எளிமையான இலக்கணமொன்றை எடுத்துக்கொண்டு நமது விவாதத்தைத் தொடருவோம்.

’குடும்பம்’ என்பது ஒரு மனித சமூகக்கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள் என்பவைகளால் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்கள். இந்தக் குடும்பபந்தம் ஒருவர் மற்றவருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் கொண்டதாகும். இந்த உரிமைகளும் கடமைகளும் மார்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டு, குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களால் கடைபிடிக்கப்படுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதல், சிறுவர்களிடம் கருணை காட்டுதல், முதியவர்களிடம் மரியாதை காட்டுதல், முதியவர்களைப் பாதுகாத்தல், குடும்பம் சுமூகமாக நடந்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளில் அடங்கும். Continue reading அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

அல்லாஹ் நேசிக்கும் அடியானை வானவர்கள் நேசிப்பர்.

1692. உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில் ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7485 அபூஹுரைரா (ரலி).

1693. கிராமவாசிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போதும் சம்பவிக்கும்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?’ என்று கேட்டார்கள். அவர் ‘நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!” என்றார்கள்.

புஹாரி : 6167 அனஸ் (ரலி).

1694. ”(இறைத்தூதர் அவர்களே!) ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)” என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்” என்று கூறினார்கள்.

புஹாரி : 6170 அபூமூஸா (ரலி).

மறைமுகமான பிரார்த்தனை

பார்வைக்கப்பால் இருப்பவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு வேண்டிக் கேட்கின்ற பிரார்த்தனைகள் முன்னிலையில் அவ்வாறு கேட்பதைக் காட்டிலும் இறைவனிடம் மிக்க ஏற்புடையதாகும். ஏனெனில் அது தூய எண்ணம் கொண்டு பிரார்த்திக்கும் துஆ அல்லவா? கலப்பற்ற எண்ணத்தால் பார்வைக்கப்பால் இருந்து ஒருவனுக்கு துஆ செய்யும்போது, அதன் தூய்மையையும், மதிப்பையும் அளவிட முடியாதல்லவா? சாதாரணமாக அல்லாஹ்விடம் துஆச் செய்பவரோடு சேர்ந்து மறைமுகமாகப் பிரார்த்திப்பவரை ஒப்பிட்டால் நிறைய வித்தியாசங்களைக் காண முடியும். Continue reading மறைமுகமான பிரார்த்தனை

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (1)

இதுபோன்று தான் சிருஷ்டிகளைக்* கொண்டு ஆணையிட்டுத் தம் தேவையை வேண்டுவது. இதுவும் விலக்கப்பட்ட செய்கையாகும். படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்வதை எல்லா மத்ஹபுடைய இமாம்களும் வெறுத்திருக்கிறார்கள். சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்து இன்னொரு சிருஷ்டியிடம் கேட்பது கூடாதெனின், அதே சிருஷ்டியைக் கொண்டு படைத்தவனிடம் ஆணையிட்டுக் கேட்க முடியுமா? அது எப்படி அனுமதிக்கப்படும்? அல்லாஹ்வுக்கு வேண்டுமானால் தம் சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாம். தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்வதில் தன் வல்லமையை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். தன் ஒருமைப்பாட்டை நிரூபித்துக் காட்டுகின்ற பல திருஷ்டாந்தங்களை ஏகத்துவத்தின் தீர்க்கமான பல சைக்கினைகளை இறைவன் இந்த சத்தியத்தால் வெளிப்படுத்துகிறான். இறைவன் இரவு பகலைக் கொண்டு ஆணையிடுகிறான். ‘யாவையும் மறைத்துக் கொள்ளும் இருண்ட இரவின் மீது ஆணையாக! பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக’ என்று கூறினான். ‘சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும், அது அஸ்தமித்ததற்குப்பின் அதைத் தொடர்ந்து உதயமாகும் சந்திரன் மீது சத்தியமாக, பாவிகளின் ஆத்மாவைப் பலமாக பறிப்பவர்கள் மீது (சத்தியமாக). இப்படியே திருமறையில் பற்பல இடங்களில் இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டுத் தன் படைப்பினங்களின் மதிப்பை விளக்குகின்றான். இது இறைவனைப் பொருத்தவரையில் பொருந்துகின்ற ஒரு சத்தியமாகும். Continue reading படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (1)