Tag Archives: விருந்து

70. உணவு வகைகள்

பாகம் 6, அத்தியாயம் 70, எண் 5373 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பசியாளருக்கு உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். (போர்க் கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறினார்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்அனீ’ எனும் சொல்லுக்குக் ‘கைதி’ என்று பொருள். … Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 70. உணவு வகைகள்

ஹுதமா, ஹாவியா, ஜக்கூம்?

கேள்வி எண்: 113. ஹுதமா, ஹாவியா, ஜக்கூம் என்று குர்ஆன் எவற்றைக் கூறுகிறது?

Posted in கேள்வி பதில் | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on ஹுதமா, ஹாவியா, ஜக்கூம்?

ஓதிப் பார்க்க கூலி வாங்க அனுமதி.

1420. நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஓதிப் பார்க்க கூலி வாங்க அனுமதி.

ஒரு முஸ்லீமுக்கு பிற முஸ்லீமின் மீதுள்ள கடமை.

1397. ”ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1240 அபூஹுரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஒரு முஸ்லீமுக்கு பிற முஸ்லீமின் மீதுள்ள கடமை.

எந்த உணவையும் குறை கூறாதே..

1336. நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள். புஹாரி : 3563 அபூஹூரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on எந்த உணவையும் குறை கூறாதே..

இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.

1333. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5392 அபூ ஹுரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.

தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.

1330. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.”.. அல்லது ‘இவருக்கு விருந்தளிப்பவர் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.

சுரைக்காயை விரும்பி உண்ணுதல்.

1324. ‘ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்தி போடப்பட்ட குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்; நபி (ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகி … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on சுரைக்காயை விரும்பி உண்ணுதல்.

மிக நெருக்கமான நட்புடையவர் விருந்துக்கு அவர் அழைக்காதவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்தல்.

1322. (போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, ‘நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?’ என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on மிக நெருக்கமான நட்புடையவர் விருந்துக்கு அவர் அழைக்காதவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்தல்.

விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..

1321. அபூ ஷுஐப் என்ற அன்ஸாரி, (பிராணியை) அறுத்துத் துண்டு போடும் தம் ஊழியரிடம், ‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப் போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்!” என்று கூறிவிட்டு. ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் வேறு ஒரு மனிதரும் சேர்ந்து … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..