Tag Archives: கண்ணியம்

அத்தியாயம்-9. இஸ்லாத்தில் பெண்களின் நிலை. (STATUS OF WOMEN IN ISLAM)

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பிரச்சினைக்குரிய ஒரு விவாதமே அல்ல. ஆனால் வேதனைக்குரிய நிலையில் அது ஒரு விவாதப்பொருளாக மாற்றப்பட்டு விட்டது. இதற்குக் காரணம், சில மேலைநாட்டவர்கள் வேண்டுமென்றே தூவிய விஷ வித்துக்களேயாகும். இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதற்கு திருக்குர்ஆன் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. அத்துடன் ஆரம்பகால முஸ்லிம்கள் பெண்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பது ஒரு … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-9. இஸ்லாத்தில் பெண்களின் நிலை. (STATUS OF WOMEN IN ISLAM)

அத்தியாயம்-8. திருமணமும் – மணவிலக்கும். (MARRIAGE AND DIVORCE)

இஸ்லாம் தரும் கொள்கைகளுள் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை அல்லது மிகவும் திரித்துக் கூறப்பட்டு வருபவை திருமணத்தைப் பற்றி இஸ்லாம் தரும் கொள்கைகளாகும். திருமணங்கள் குறித்து இஸ்லாம் தரும் விளக்கங்களை வெவ்வேறு தரப்பினரும் தங்களது விருப்பம்போல் விமர்சித்து வருகின்றார்கள். அவர்களுக்கு இஸ்லாம் எந்த நோக்கத்தோடு அணுகுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுவது நிறைந்த பலனைத் தரலாம். ஆகவே இதுகுறித்து … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-8. திருமணமும் – மணவிலக்கும். (MARRIAGE AND DIVORCE)

அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-1) (JESUS SON OF MARY)

மனித வரலாற்றில் எண்ணற்ற வாதப் பிரதிவாதங்களால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சினை நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு பற்றியதாகும். அவர்கள் முழுக்க முழுக்கத் தெய்வீகமானவர்களா? அல்லது மனிதர்களில் ஒருவர்தானா? அல்லது அவர்கள் பாதி மனிதராகவும் பாதித் தெய்வீகமாகவும் இருந்தார்களா? அவர்கள் உண்மையானவர்களா அல்லது ஏமாற்றித் திரிந்தவர்களுல் ஒருவரானவர்களா? அவர்கள் எல்லாக் குழந்தைகளையும் போலவே தாய், தந்தை … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-1) (JESUS SON OF MARY)

அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)

இஸ்லாத்தில் மனிதனின் பொருளாதார வாழ்வு, உறுதியான அடிப்படை, தெளிவான இறைவழி காட்டுதல் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானவற்றை நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது ஒருவனின் கடமை என்பது மட்டுமல்ல, மாட்சிமைமிக்க சிறந்த நற்குணமுமாகும். உழைத்திடும் திறன் இருந்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்தவர்களை அண்டிப் பிழைத்திடுவது மார்க்கத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)

அத்தியாயம்-4. குடும்ப வாழ்வின் ஏனைய பகுதிகள்

நம்மிடம் வேலை செய்பவர்கள், நமது குடும்பத்தோடு இணைந்த ஏனைய உறுப்பினர்கள், உறவினர்கள், நம்மை அடுத்து வாழும் அண்டை வீட்டார்கள், இவர்களோடு நாம் அமைத்துக் கொள்ள வேண்டிய உறவின் முறையும் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடையதே. நிரந்தரமாக தங்களது வேலைகளுக்காக ஏவலர்களை அமர்த்தியிருப்பவர்கள், அந்த ஏவலர்களை தங்களுடைய சகோதரர்களைப்போல் நடத்திட வேண்டும் என்றும், அடிமைகளைப்போல் நடத்திடக் கூடாதென்றும் இறைவனின் … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. குடும்ப வாழ்வின் ஏனைய பகுதிகள்

அத்தியாயம்-4. பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவு.

குழந்தைகளின் உரிமைகளும் பெற்றோரின் கடமைகளும். குழந்தைகளைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறையை சில கொள்கைகளாகச் சுருக்கலாம். முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது.  இரண்டாவதாக பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது. சில நேரங்களில், பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பில் அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் குழந்தைகள் … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவு.

அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.

இஸ்லாம் மனிதனின் தனிவாழ்க்கைத் தூய்மை நிறைந்த ஒன்றாக இருந்திட வேண்டும் என விழைகின்றது. இந்த விதத்திலேயே தனது போதனைகளை அமைத்துத் தருகின்றது. மனிதன் ஆரோக்கியம் நிறைந்தவனாக இருந்திட, அவனுக்கு மிகவும் ஆரோக்கியமானதொரு உணவு திட்டத்தை அமைத்துத் தந்துள்ளது. தனிமனிதனின் ஒழுக்கம் மாசுபடாமல் இருந்திட, அவன் எவ்வாறு ஆடை அணிந்திட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. அவன் … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.

அத்தியாயம்-3 ’ஹஜ்’

இஸ்லாத்தின் தூண்கள் என்று வருணிக்கப்பட்டுள்ள கடமைகளுள் இறுதியானது ‘ஹஜ்’ எனும் கடமையாகும்.மக்காவிலிருக்கும் ஆதி இறை இல்லமாம் கஃபாவை நோக்கி மேற்கொள்ளப்படும் புனிதப் பயணமே ஹஜ். இந்தப் புனிதப் பயணத்தை வாழ்வில் ஒரு முறையாவது மேற்கொண்டிடுவது, உடல்பலம், மனபலம், பணபலம் இவற்றையுடைய முஸ்லிம்களின் கடமையாகும்.

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-3 ’ஹஜ்’

அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.

இந்த நூலின் முன்னுரையில், மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையையும், இஸ்லாத்தின் எதிர்காலத்தையும் சுருக்கமாக விவாதித்தோம். இந்தப் பகுதியில் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள மனிதர்களின் நிலைமையையும், சாதாரணமாக மனிதர்களின் நிலைமை எத்தன்மையதாக இருக்கின்றது என்பதையும், உலகைப்பற்றி இஸ்லாம் சொல்லும் நியதிகள் என்னவென்றும் பார்ப்போம்.

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.

அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.

இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில: 1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே! 2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான்.

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.