மறைமுகமான பிரார்த்தனை

பார்வைக்கப்பால் இருப்பவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு வேண்டிக் கேட்கின்ற பிரார்த்தனைகள் முன்னிலையில் அவ்வாறு கேட்பதைக் காட்டிலும் இறைவனிடம் மிக்க ஏற்புடையதாகும். ஏனெனில் அது தூய எண்ணம் கொண்டு பிரார்த்திக்கும் துஆ அல்லவா? கலப்பற்ற எண்ணத்தால் பார்வைக்கப்பால் இருந்து ஒருவனுக்கு துஆ செய்யும்போது, அதன் தூய்மையையும், மதிப்பையும் அளவிட முடியாதல்லவா? சாதாரணமாக அல்லாஹ்விடம் துஆச் செய்பவரோடு சேர்ந்து மறைமுகமாகப் பிரார்த்திப்பவரை ஒப்பிட்டால் நிறைய வித்தியாசங்களைக் காண முடியும். Continue reading மறைமுகமான பிரார்த்தனை

ஆதம் நபியவர்கள் பெருமானாரின் பொருட்டால் வஸீலாத் தேடினார்கள் என்று கூறப்படும் ஹதீஸைப் பற்றி…

ஆதம் (அலை) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என்று சொல்லப்படும் இந்த ஹதீஸ் நபிகளைப் பற்றி உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. சுவர்க்கத்தில் பிசகிய ஆதம் (அலை) அவர்கள் ‘இறைவா! முஹம்மதின் பொருட்டால் அவரின் உரிமையைக் கொண்டு ஆணையிட்டுக் கேட்கிறேன். நீ என் குற்றங்களை மன்னித்தருள்’ என்றார்களாம்.

இதற்கு இறைவன் ‘ஆதமே! (நான் முஹம்மதைப் படைப்பதற்கு முன்னரே) நீர் அவரை எப்படி அறிந்து கொண்டாய்’ என்று கேட்டான். Continue reading ஆதம் நபியவர்கள் பெருமானாரின் பொருட்டால் வஸீலாத் தேடினார்கள் என்று கூறப்படும் ஹதீஸைப் பற்றி…

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (3)

மனிதன் தன் பிரார்த்தனையில் இன்னாரின் பொருட்டால், அவரின் உரிமையால் என்று கூறிக் கேட்கும் போது மனிதனுக்கு ஏதோ சில உரிமைகள் அல்லாஹ்விடம் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இப்படி நினைத்தல் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் போக்கல்ல என விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இது முஃதஸிலாக்களின் கொள்கையாகும். இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிரிவினராவர். ‘மனிதனுக்குச் செய்ய வேண்டிய எந்த செயலுமே அல்லாஹ்வின் மீது கடமையாகவில்லை’ என்று வேறு சிலர் கூறுகின்றனர்.அவன் தன் அடியார்களுக்குச் செய்கின்ற அனுக்கிரகங்கள், நன்மைகள் அனைத்துமே அவன் அருள்கிருபை என்ற அமைப்பிலாகும். அல்லாஹ் தன்மீது அடியார்களுக்கு அருள் பாலிப்பதை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். மூமினான படைப்பினங்களுக்கு இத்தகைய இரக்கமான கூலிகளை அளிப்பதாக தன்மீது இறைவன் தானாகவே ஏற்படுத்தியுள்ளான். அவர்களுக்கு அநீதி இழைப்பதை தன்மீது விலக்கியிருக்கிறான் அல்லவா? சிருஷ்டிகளுக்கு எந்தச் செயலை அல்லாஹ் செய்தாலும் அது கடமை என்ற அடிப்படையிலல்ல. மாறாக அவன் தன் மீது ஏற்படுத்திக் கொண்ட இரக்கம், நேர்மை, நீதி என்பன போன்ற குணங்களுக்கு, தன்மைகளுக்கும் உட்பட்டதாகும். ஹதீஸுல் குத்ஸியிலும் இந்த உண்மையை நம்மால் பார்க்க முடிகிறது. அதில் இறைவன் குறிப்பிடுகிறான்: ‘அடியார்களே! என் மீது நான் அநீதியை விலக்கிக் கொண்டேன். இந்த அநீதியை விட்டு உங்களையும் விலக்குகிறேன். நீங்கள் யாருக்கும் அக்கிரமம், அநீதி செய்யாதீர்கள்’. Continue reading படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (3)

பாடம் – 5

ஷிர்க் (அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்)

ஷிர்க் எனும் செயல் இரண்டு வகைப்படும்.

1. பெரிய ஷிர்க்

2. சிறிய ஷிர்க்

1. பெரிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்)

இதன் காரணத்தால் நற்செயல்களில் தோல்வியும் என்றென்றும் நரக நெருப்பில் இருக்க வேண்டிய பயங்கர நிலையுமேற்படும் எனக் குர்ஆன் கூறுகிறது.

‘இன்னும் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்) அவர்களை விட்டும் அழிந்து விடும்.’ (6:88) Continue reading பாடம் – 5