இவனல்லவா இறைவன்.

“பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்து பாருங்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக.

வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம் என்று (நபியே) நீர் (அ

வர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூற முடியும்? எனவே) “எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்று கூறுவீராக; அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை; எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுப்பண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் (நம்பிக்கை)கொள்ளமாட்டார்கள்.

இரவிலும் பகலிலும் வசித்திருப்பவை எல்லாம் அவனுக்கே சொந்தம்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

“வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்து கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப்படுவதில்லை; என்று (நபியே) நீர் கூறுவீராக; இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.

“நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளில் (ஏற்படும்) வேதனையை நான் பயப்படுகிறேன்” என்று கூறுவீராக.

“அந்நாளில் எவரொருவர் அந்த வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ, நிச்சயமாக (அல்லாஹ்) அவர்மீது கிருபை புரிந்து விட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்” (என்று கூறுவீராக).

“(நபியே) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்தி விட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கி விட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.

அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

(நபியே) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களூக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக்கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும்நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூற முடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறி விடும்.

எவரும் தம் குழந்தைகளைக் சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங்கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம் ) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்ப மாட்டார்கள்.

அல் குர்ஆன் 6-11லிருந்து 20 வரை

உண்மை முஸ்லிமின் செயல்கள்.

வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கிஅவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும்; உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.

இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன் தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவ்ர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதாட)ட முற்பட்டால், “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

இன்னும் அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா (சிர வணக்கம்) செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

எங்கள் இறைவனே! எங்களை விட்டும் நரகத்தின் வேதனயைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.

நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

இன்னும், அவ்ர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்ய மாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும் இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்க மாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவ்ர்கள் நியாயமுன்றிக் கொல்லமாட்டார்கள். விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

கியாம(இறுதி தீர்ப்பு) நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கி விடுவர்.

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து ஈமான்(நம்பிக்கை) கொண்டு ஸாலிஹான (நல்ல) செய்கைகள் செய்கிறார்களோ-அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.

இன்னும், எவர் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து ஸாலிஹான (நல்ல) செய்கைகள் செய்கிறாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.

அன்றியும், அவர்கள் பொய் ச்சட்சி சொல்ல மாட்டார்கள்: மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள்.

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)

மேலும் அவர்கள்: எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தி உடையவர்களுக்கு எங்களை இமாமாக-வழிகாட்டியாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு (ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர் கொண்டழைக்கப்படுவார்கள்.

அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.

(நபியே-தூதரே) சொல்வீராக: உங்களுடைய பிரார்த்தனை இல்லா விட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்; ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.

அல் குர்ஆன்: 26-61முதல்77வரை

அவனே (அல்லாஹ்) வணக்க வழிபாட்டுக்கு உரியவன்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களூக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்;தூய்மையும்) உடையோராகலாம்.
அல்குர்ஆன்: 2-21

நன்றி மறத்தல் நன்மையோ

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்திலிருந்து மழை பொழியச் செய்து; அதிலிருந்து உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை (மற்ற கடவுள்கள்) ஏற்படுத்தாதீர்கள்.

அல்குர்ஆன்: 2-22

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிற்ரஹீம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய

அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.