கடவுளை தேடுவோரே கவனியுங்கள்

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது: தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. அல் குர்ஆன்: அத்தியாயம்-22 வசனம்-73.

மேன்மையான மனிதா?

(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிபட்டவன் என்றால் அவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடிச்(சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டு கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்.

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால் அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவை யாவும் மறைந்து விடும். எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனை) புறக்கணித்து விடுகிறீர்கள் – இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கிறான்.

(கரை சேர்ந்த) பின் அவன் உங்களைப் பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காணமாட்டீர்கள்.

அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றைஉங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விட மாட்டான் என்றும் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களூக்காக(க் கேட்போர்) எவரையும் காண மாட்டீர்கள்.

நிச்சயமாக ஆதமுடைய சந்ததியை கண்ணியப் படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட, அவர்களை (தகுதியால்) மேன்மைப்படுத்தினோம்.

அல் குர்ஆன்: அத்தியாயம்-17, வசனம்- 66 முதல் 70 வரை.

அவனுடைய (அல்லாஹ்வின்) அருட்கொடைகள்.அவன் (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்;

அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்.

அவன் மனிதனை இந்திரியத் துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான

எதிரியாக இருக்கிறான்.

கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ளஆடைய

ணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும்

செய்கிறீர்கள்.

அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை

நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்து விடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொழிவும்)

அழகுமிருக்கிறது.

மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களு

டைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன – நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக

இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்

செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும் நீங்கள்

அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய

முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள்

அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்து விடுவான்.

அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களூக்கு

அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான

மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.

அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம் (ஜைத்தூன்) மரத்தையும்,

பேரித்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனி

வர்க்கங்களிலிருந்தும அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் – நிச்சயமாக இதில்

சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.

இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள்

நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன்

கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன – நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய

மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி

கொடிகள், பிராணிகள் பறவைகள் போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில்

(அல்லாஹ்வின் அருட்கொடைகளை நன்றியுடன்)நினவு கூறும் மக்களுக்கு(த் தக்க)

அத்தாட்சியுள்ளது.

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும்,

நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும்

அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரை

பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்கு

சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும்

பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை

நிறுத்தினான்;இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன்

ஆறுகளையும், பாதைகளையும் (அமைத்தான்)

(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்)

நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து

கொள்கிறார்கள்.

(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத) (நீங்கள் வணங்குப)வை

போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட்கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை

(வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க

மன்னிப்பவனாகவும், மிகக் கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்

படுத்துவதையும் அறிகிறான்.

அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ. அவர்கள் எந்தப்

பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும்

படைக்கப்பட்டவர்களாவார்கள்.

அவர்கள் இறந்தவர்களே – உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்போழுது எழுப்பப்படுவார்கள்

என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல் குர்ஆன்: அத்தியாயம் 16, வசனம் 3 லிருந்து 21 வரை.

அறிவுடையோரே! பதில் தாருங்கள்.

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக்

கவனித்தீர்களா?

அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா?

உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்;

எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை

பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை

உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).

முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக

நீங்கள் அறிவீர்கள். எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள்

உணர்வு பெற வேண்டாமா?

(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

அதனை நீங்கள் முளைக்க செய்கிறீர்களா? அல்லது நாம்

முளைக்கச் செய்கிறோமா?

நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாக்கி விடுவோம்

-அப்பால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

“நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.

மேலும் (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்)

தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா?

மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம்

இறக்குகிறோமா?

நாம் நாடினால், அதை கைப்புள்ளதாக்கியிருப்போம்;

(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு

பண்ணுகிறோமா?

நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.

ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் (அல்லாஹ்)

திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் (புகழ்தல்) செய்வீராக.

அல் குர்ஆன்: 56 – 58 லிருந்து 74 வரை.

நிராகரிப்போரின் இறுதி நிலை.

சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உறுதியாகவும்பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்று கொண்டோம்)” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.

(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்) வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் இறுதி நாளையையும் (நம்பாது) மறுத்தனர்.

(நரகவாசிகள், சுவர்க்கவாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அனேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை-அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கிறார்கள்.

அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள், “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை-அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு- அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்; “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”

“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களேஅவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.

நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) மீது தடுத்து (ஹராம்-அனுமதியில்லை) விட்டான்” என்றும் கூறுவார்கள்.

(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

இவர்கள் ( தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டணை நாள் வந்த போது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசகூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன் செய்து கொண்டிருந்த(தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் – நிச்சயமாக அவர்கள் தமக்கு தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.

அல் குர்ஆன்: 7-44 முதல் 53 வரை.