4.உளூச் செய்வது

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 132

‘மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். ‘அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்” என அலீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 133

ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டபோது ‘மதீனா வாசிகள் ‘துல்ஹுலைஃபா’ என்ற இடத்திலிருந்தும், ஷாம் வாசிகள் ‘ஜுஹ்ஃபா’ என்ற இடத்திலிருந்தும் நஜ்த் வாசிகள் ‘கர்ன்’ என்ற இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.”யமன்’ வாசிகள் ‘யலம்லம்’ என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இந்த வார்த்தை வந்ததாக எனக்குத் தெரியவில்லை” என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார். Continue reading 4.உளூச் செய்வது

நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?

நபி (ஸல்) அவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடுதல் அன்னார் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைக் கொண்டு பிரார்த்தித்தலும், சத்தியம் செய்து கேட்டலும் அவர்கள் இறந்ததற்கப்பால் அனுமதிக்கப் படாதது போன்று நபியவர்கள் மறைந்திருக்கும் போதும், அவர்கள் முன்னிலையில் வைத்தும் இப்படிச் செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில் நபிமார்களைப் போன்றுதான் மற்றவர்களும். இவர்களைக் கொண்டெல்லாம் வஸீலா தேடுவதை நபித்தோழர்களும், தாபியீன்களும்வழக்கமாக்கிக் கொள்ளவில்லை. Continue reading நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?

சன்மார்க்கம்!

மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே இல்லை. இறைவனை நெருங்கிய நல்மக்கள் இப்பாதையைப் பின்பற்றினர். இதனால் அவர்கள் வெற்றியடைந்து ஜெயசீலர்களாகவும் திகழ்ந்தனர். இப்பாதையை கடைபிடித்தொழுகிய அல்லாஹ்வின் படைகள் அவன் பாதையில் போராடி பெரும் வெற்றிகளை ஈட்டினார்கள். இதற்கு நேர்முரணாக எவர்கள் நடப்பார்களோ அவர்களெல்லாம் வழி தவறி நெறி கெட்ட பாதையில் சென்று விடுகிறார்கள். இதனால் இம்மை, மறுமை ஆகிய ஈருலகில் வேதனைக்கும் சோதனைக்கும் ஆளாகி விடுகின்றனர். Continue reading சன்மார்க்கம்!