அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை

வழிபாடுகளில் ஏற்றமானது தொழுகை. அத்தொழுகையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் கேட்டல், திக்ரு செய்தல் யாவும் அடங்கியிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில் சொல்ல வேண்டுமென்பது சட்டம். தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்து ‘வஜ்ஜஹ்த்து, தனா போன்றவை ஒதி முடித்ததும் குர்ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும். ருகூவிலும், ஸுஜுதிலும் குர்ஆன் ஓதுதல் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் திக்ருகள், துஆக்கள் தான் ஓதவேண்டும். பெருமானார் அவர்கள் தொழுகையின் இறுதியில் பிரார்த்தித்திருக்கிறார்கள். தோழர்களிடமும் அதைப் போன்று பிரார்த்திக்க ஏவியிருக்கிறார்கள். குறிப்பாக ஸுஜுதில் துஆ செய்வது மிக ஏற்றமானது. ஸுஜுதில் அதிகமாகப் பிரார்த்திப்பதைப் பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பியிருக்கிறார்கள். நிலையிலும், ருகூவிலும் கூடப் பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும். குர்ஆன் ஓதுவதும், திக்ரு செய்வதும் தொழுகையில் மிகச்சிறந்த கர்மங்களாக இருந்தும் கூட மனிதன் தன் இரட்சகனிடம் சிரம் பணிந்து பாவமன்னிப்புத் தேடுதல் சிலாகிக்கத் தக்கதாக கருதப்படுகிறது. Continue reading அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை

படைத்தவனை ஒப்புக் கொள்ளுதல்.

குறைஷிகளிலிருந்தும், மற்ற சமூகங்களிலிருந்தும் முஷ்ரிக்குகள் என்று யாரைப்பற்றி திருமறை பிரகடனப்படுத்தியதோ அவர்களும் நபி (ஸல்) அவர்கள் எவர்களை வெட்டிக் கொன்று அவர்களின் செல்வத்தைப் பறித்து அவர்களின் மகளிரை சிறை பிடிக்க வேண்டுமென்றும், அவர்கள் அனைவரும் நரகவாதிகளென்றும் பகிரங்கமாக விளக்கினார்களோ அவர்களும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வானங்கள் பூமிகளைப் படைத்தவன் என்ற உண்மையை மனமாற ஏற்று ஒப்புக் கொண்டிருந்தார்கள். Continue reading படைத்தவனை ஒப்புக் கொள்ளுதல்.