4.உளூச் செய்வது

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 132

‘மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். ‘அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்” என அலீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 133

ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டபோது ‘மதீனா வாசிகள் ‘துல்ஹுலைஃபா’ என்ற இடத்திலிருந்தும், ஷாம் வாசிகள் ‘ஜுஹ்ஃபா’ என்ற இடத்திலிருந்தும் நஜ்த் வாசிகள் ‘கர்ன்’ என்ற இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.”யமன்’ வாசிகள் ‘யலம்லம்’ என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இந்த வார்த்தை வந்ததாக எனக்குத் தெரியவில்லை” என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார். Continue reading 4.உளூச் செய்வது

சன்மார்க்கம்!

மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே இல்லை. இறைவனை நெருங்கிய நல்மக்கள் இப்பாதையைப் பின்பற்றினர். இதனால் அவர்கள் வெற்றியடைந்து ஜெயசீலர்களாகவும் திகழ்ந்தனர். இப்பாதையை கடைபிடித்தொழுகிய அல்லாஹ்வின் படைகள் அவன் பாதையில் போராடி பெரும் வெற்றிகளை ஈட்டினார்கள். இதற்கு நேர்முரணாக எவர்கள் நடப்பார்களோ அவர்களெல்லாம் வழி தவறி நெறி கெட்ட பாதையில் சென்று விடுகிறார்கள். இதனால் இம்மை, மறுமை ஆகிய ஈருலகில் வேதனைக்கும் சோதனைக்கும் ஆளாகி விடுகின்றனர். Continue reading சன்மார்க்கம்!

நாத்திகர்களிடத்தில் ஸியாரத்தின் தாத்பரியம்.

தத்துவ ஞானிகளிலுள்ள சில தஹ்ரிய்யாக்கள் (நாத்திகர்கள்) ஸியாரத்தின் போது புதுமாதிரியான ஒரு ஷிர்க்கையும் மக்களுக்கு விளக்கி காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய சித்தாந்தம் வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்தான் என்பதெல்லாம் உவமிப்புகள்தாம் உன்மையல்ல என்பதாகும். Continue reading நாத்திகர்களிடத்தில் ஸியாரத்தின் தாத்பரியம்.

பாடம் – 11

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும்.

“இன்னும் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர் ஜின்களில் உள்ள ஆண்கள் பலரிடம் (தங்களை) காக்கத் தேடிக் கொண்டிருந்தனர் இதனால் அவர்கள் (ஜின்கள்) அவர்களை (மனிதர்களை) பாபத்திலும் இறையச்சமற்ற தன்மையில் கர்வத்தையும் அதிகமாக்கி விட்டார்கள்.” என அல்லாஹ் கூறுகிறான். (72:6)

“ஒரு தங்குமிடத்தில் நுழையும் போது ‘அல்லாஹ்வின் வார்த்தைகளில் (படைப்பினங்களின்) தீங்குகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்,’ என யாரேனுமொருவர் கூறினால் அவர் அந்த இடத்தை விட்டு நீங்கும் வரை அவரை எந்தத் தீங்கும் அணுகாது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அறிவித்ததாக ஹவ்லா பின்த் ஹாகிம் தெரிவிக்கிறார். ஆதாரம்: முஸ்லிம்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கை சார்ந்த ஒரு செயலாகும்.

இப்படிப்பட்ட காரியங்களின் உதவிகள் மூலம் உலகலாவிய ஒரு சில விஷயங்களில், சில சந்தர்ப்பங்களில், லாபமும், வெற்றியும் பெறவோ அல்லது சில தீங்குகளை அல்லது நஷ்டங்களை விட்டும் பாதுகாப்புப் பெறவோ சிலருக்கு முடிந்த ஒரே காரணத்தால் இக்காரியங்களில் ஈடுபடுவது ஷிர்க்கை விட்டும் நீங்கியவை என்று ஒருவரும் கருதக் கூடாது.

மேற்குறிப்பிட்ட ஹதீஸின் ஆதாரத்தின் மூலம் அல்லாஹ்வின் வார்த்தைகள் அவனுடைய படப்பினங்களல்ல என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதன் அடிப்படையில் படைப்பினங்களின் பாதுகாப்பை நாடும் காரியம் ஷிர்க்காகும்.

மேற்குறிப்பிட்ட துஆ மிகச்சிறியதாயினும் பெரும் மகத்துவம் மிக்கது.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.