ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.

இங்கே முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். நபிமார்களையே ஷைத்தான் துன்புறுத்தவும், அவர்களுக்குத் தீங்குகளையும், அக்கிரமங்களையும் விளைவிக்கவும், அவர்களுடைய வணக்கவழிபாடுகளைக் கெடுத்து நாசம் பண்ணிடவும் தயாராவானானால் நபியல்லாத மற்றவர்களின் கதியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். (சாதாரணமான முஸ்லிம் மனிதனை ஷைத்தான் எப்படி ஆட்கொண்டு அடிமைப்படுத்தி விடுகிறான் என்பதைப் பகுத்துணர்ந்து பார்க்க வேண்டும்). நபியவர்கள் மனு-ஜின் இரு இனத்திலுள்ள அனைத்து ஷைத்தான்களையும் அடித்து அமர்த்துவதற்குரிய ஆற்றலை பெற்றிருக்கிறார்கள். அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் அறிவையும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறான். பற்பல வணக்கவழிபாடுகள், திக்ருகள், (இறை தியானங்கள்) பிரார்த்தனைகள், இறைவனின் பாதையில் போராடுதல் (ஜிஹாதுகள்) போன்ற எத்தனை எத்தனையோ வணக்கங்கள், வழிபாடுகளின் பேருதவியால் ஷைத்தனைப் பிடித்தடக்கி, ஒடுக்கும் திறமை நபிமார்களுக்குண்டு. Continue reading ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.