Category Archives: ஈமான் (நம்பிக்கை)

[பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை.

மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை. ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10) காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-8] முஸ்லிமின் வழிமுறை.

நபி(ஸல்) அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை. நபி (ஸல்)அவர்களுடன் ஒரு முழுமையான ஒழுங்குடன் நடந்து கொள்வது தன் கடமை என்பதை ஒரு முஸ்லிம் மனதார உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குக் காரணம் இது தான்: இவ்வொழுங்கை அல்லாஹ்தான் முஃமினான ஆண்,பெண் அனைவர் மீதும் கடமையாக்கி இருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் முன்னிலையில் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-8] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-7] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வின் வார்த்தையுடன்… அல்லாஹ்வின் வார்த்தையுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள்: அல்லாஹ்வின் வார்த்தை பரிசுத்தமானது. மற்ற எல்லா வார்தைகளை விட மேலானதும் சிறப்பானதும் ஆகும். திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். திருக்குர்ஆனின் கூற்றை கூறியவர் உண்மையைக் கூறியவராவார். திருக்குர்ஆனின்படி தீர்ப்பு வழங்கியவர் நீதமாக நடந்து கொண்டவராவார். திருக்குர்ஆனை அறிந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்குரியவர்கள்; அவனுக்கே உரித்தானவர்கள். அதைப் பற்றிப் பிடித்துக் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-7] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-6] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வுடன்… அல்லாஹ்வுடன் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குகள்: ஒரு முஸ்லிம் தன் தாயின் கருவறையில் இந்திரியத் துளியாக இருந்ததிலிருந்து அல்லாஹ் அவனுக்கு அருளிய அருட்கொடைகளை (இவ்வருட்கொடைகள் நாளை மறுமையில் அவன் இறைவனைச் சந்திக்கும்வரை அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்) எண்ணிப் பார்த்து அதற்காக வல்ல நாயனுக்கு, அவனை தனது நாவால் புகழ்ந்து, துதிபாடி, தன் அவயங்களை அவனுடைய வழிபாட்டில் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-6] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-5] முஸ்லிமின் வழிமுறை.

அதிகாரம் வகிப்பவர்கள். ஒரு முஸ்லிம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை கடமை என்று கருத வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்) (அல்குர்ஆன்: 4:56) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அதிகாரம் உடையவர்களுக்கு) நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள். உலர்ந்த திராட்சையைப் போன்ற … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-5] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-4] முஸ்லிமின் வழிமுறை.

காரிகள், ஃபிக்ஹ், ஹதீஸ் கலை வல்லுனர்கள். ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்காக அருளை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் சிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி நல்லதையே கூற வேண்டும். அவர்களைப் பற்றி குறை கூறவோ தப்பபிப்ராயம் கொள்ளவோ கூடாது. திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வுக்காகவே தூய உள்ளத்தோடு (குர்ஆன், ஹதீஸை) ஆய்வு … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , | Comments Off on [பாகம்-4] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.

நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தினர். ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் அவர்களை நேசிப்பதால். அவர்கள் ஏனைய முஃமின்கள், முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என நம்ப வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-2] முஸ்லிமின் வழிமுறை.

நபித்தோழர்களை நேசிப்பது. நபித்தோழர்களையும், நபியின் குடும்பத்தார்களையும் நேசிப்பது கடமை என்றும், அவர்கள் மற்ற முஃமின்கள், முஸ்லிம்களை விட சிறந்தவர்கள் என்றும் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். சிறப்பில் அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு. இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்டதைப் பொருத்துத்தான் அவர்களுடைய உயர் அந்தஸ்து இருக்கும். அவர்களில் சிறந்தவர்கள் நேர்வழி பெற்ற கலீஃபாக்கள். அடுத்து சொர்க்கம் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , | Comments Off on [பாகம்-2] முஸ்லிமின் வழிமுறை.

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

[பாகம்-1] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வை நம்புவது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமெனில், இறைவன் ஒருவன் இருக்கின்றான்,அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன்! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். அனைத்துக்கும் இரட்சகனும், எஜமானனும் அவனே! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் பரிபூரணமானவன்! என்று நம்ப வேண்டும். இதற்கு அறிவு பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் சான்றுகள் உள்ளன. … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-1] முஸ்லிமின் வழிமுறை.