அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

3. இஸ்லாமிய வரலாற்றை விமர்சிக்குமுன் அந்த வரலாற்று விற்பன்னர்கள் போரைப்பற்றியும், அமைதியைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்லுகின்றது என்பதை கூர்ந்து, நேர்மையான எண்ணத்தோடு படித்திடுவது நன்மை பல பயக்கும். இஸ்லாம் வெற்றிக்கொண்ட இடங்களிலெல்லாம் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதையும், முஸ்லிம்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இஸ்லாத்தோடு தொடர்பு கொண்ட பின்னர் அவர்கள் எய்திய நிலைகளையும் கூர்ந்து கவனிப்பது அந்த அரசியல் விமர்சகர்களுக்கு இன்னும் பல நன்மைகளைத் தரும். வேற்று நாட்டவர்களால் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் முஸ்லிம்களை அழைத்துத் தங்களை அந்த ஆதிக்கங்களிலிருந்து விடுவித்திட விடுத்த அபயக்குரலைப் படித்திடும்போது அவர்கள் (வரலாற்றாசிரியர்கள்) என்ன நினைப்பார்கள். முஸ்லிம்கள் வெற்றிபெற்ற இடங்களிலெல்லாம் அவர்களை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்ற காட்சிகளை கண்டிடும்போது, அந்நிய ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களை மீட்டிட்ட முஸ்லிம்களை பொதுமக்கள் மட்டுமல்ல, மதத்தலைவர்களும் வரவேற்றதை படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? முஸ்லிம்கள் அமுல்படுத்தும் நியதியின் கீழ்தான் தங்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று அழைத்த நிகழ்ச்சிகளைப் படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவற்றைப் பார்த்து திகைத்த அவர்கள் திரித்துக்கூற விரும்பினார்களேயன்றி உண்மையை உரைக்க முன்வரவில்லை. Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (2)

சுட்டெரிக்கும் பாலைப் பெருவெளியில் இருண்டு கிடந்த அரேபியாவிலிருந்து கிளர்ந்தெழுந்து ரோம், பாரசீகம், இன்னும் ஐரோப்பா போன்ற பெருநில வெளிகளிலெல்லாம் அறிவுக்கதிர் சிந்திய அரேபியர்களைப் போர்வெறியர்கள் என வர்ணிக்கின்ற ‘மேதை’களும் வாழத்தான் செய்கின்றார்கள். இந்த ‘மேதை’களில் சிலர் இஸ்லாத்திற்கு எதிராக தங்களது பேனா முனைகளை ஓட்டியபோது, ’இஸ்லாம் தந்த உற்சாகத்தால் முஸ்லிம்கள் தங்களால் முடிந்தவரை வாளால் மதம் பரப்பினார்கள்’ என வரைந்து வைத்துள்ளனர்.

உண்மை உணர்வுள்ள பலர் இதை மறுத்துப் பதில் தந்துள்ளார்கள். அதாவது: Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (2)

அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (1)

முஸ்லிம்களால் மறக்கப்பட்டுவிட்ட – மற்றவர்களால் முற்றிலும் திரித்துக் கூறப்பட்டு வரும் இஸ்லாத்தின் சில பகுதிகள் குறித்து இங்கே விவாதிக்கப் போகின்றோம். இந்தப் பகுதிகள் பற்றிய உண்மையான விளக்கங்களைத் தந்திட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் மன்னிப்புக் கேட்பதைப் போன்றதொரு மனநிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். ஏனெனில் இஸ்லாம் இதை முற்றாக வெறுக்கின்றது. இன்னும் இஸ்லாத்தில் இதற்குத் தேவையில்லை. அதுபோலவே சிலரை முகஸ்துதி செய்திட வேண்டியதுமில்லை. சில, பலரைத் திருப்திபடுத்திட வேண்டியதுமில்லை. சிலரைச் சாடிட வேண்டியதுமில்லை. ஏனெனில் இஸ்லாம் இவை போன்றவற்றைச் சகித்துக் கொள்வதேயில்லை. இஸ்லாம் நம்மிடம் நேரிய எண்ணத்தையும், நேரிய செயல்களையும் எதிர்பார்க்கின்றது. துன்பங்கள் ஆயிரம் வரினும் அஞ்சாது நேர்மையைக் கடைபிடித்திட கட்டளையிடுகின்றது. Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (1)

அத்தியாயம்-4. உலகளாவிய வாழ்க்கை (INTERNATINAL LIFE)

இஸ்லாத்தில் சர்வதேசிய வாழ்க்கை என்பது இஸ்லாமிய அரசுக்கும் அல்லது இஸ்லாமிய நாட்டிற்கும் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள அரசுகளுக்கும் அல்லது நாடுகளுக்கும் இடையேயுள்ள உறவின் முறையாகும். இஸ்லாமிய சமுதாய வாழ்வின் ஏனைய பாகங்களைப்போல் இந்த உறவும் இறைவனின் வழிகாட்டுதலில் உருவாவதேயாகும். இந்த வெளிநாட்டு உறவு பின்வரும் அடிப்படைகளின் கீழ் அமைவதாகும். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. உலகளாவிய வாழ்க்கை (INTERNATINAL LIFE)

அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (2)

9. திருக்குர்ஆனே இஸ்லாமிய நாட்டின் அமைப்பு நிர்ணயச்சட்டம். எனினும் முஸ்லிம்கள் தங்களுடைய பொதுவான விவகாரங்களில் ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்தே செயல்பட்டிட வேண்டும். இது சட்டம் இயற்றும் சபைகளும், ஆலோசனை அவைகளும் ஏற்பட வழிவகுக்கின்றது. இந்த சபைகளும் அவைகளும் வட்டார, தேசிய, சர்வதேசிய அளவில் அமைந்திடலாம். இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் பொதுப்பிரச்சினைகளில் தங்களது சிறந்த ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். அவ்வாறு வழங்கிடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இந்தக் கடமையை ஒவ்வொரு குடிமகனும் நிறைவேற்றிட வகைசெய்யும் வகையில் ஆட்சியாளர் எல்லாப் பிரச்சினைகளிலும் நாட்டிலே இருக்கும் அறிஞர்களின் கருத்துக்களைக் கோரிப்பெற்றிட வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். அறிஞர்கள் அனுபவம் மிக்கவர்கள், இவர்களின் கருத்துக்கள் ஆட்சியாளருக்குப் பலன் பல பயக்கும். இப்படிக் கூறுவதனால் சராசரி குடிமகனுக்குத் தன் கருத்துக்களை வழங்கிடும் உரிமையில்லை என்று பொருள் கொண்டிடக் கூடாது. சூழ்நிலை வாய்க்கும் போதெல்லாம் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திடும் உரிமையும் கடமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (2)

அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (1)

மனிதனின் சமுதாய வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றைப் போலவே மனிதனின் அரசியல் வாழ்வையும் இஸ்லாம் சில உயர்ந்த ஒழுக்க, ஆன்மீக அடிப்படைகளின் கீழ் அமைத்துத் தருகின்றது. வாழ்வின் ஏனையத் துறைகளைப்போலவே இதற்கும் தெளிவான இறைக்கட்டளைகள் இருக்கவே செய்கின்றன. இந்த இறைக்கட்டளைகளின் படியே ஒரு முஸ்லிமின் அரசியல் வாழ்க்கை அமைக்கப்பட வேண்டும். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (1)

அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (2)

திருக்குர்ஆன் செல்வம் மனிதனுக்கு ஒரு சோதனை என்றும், அது மனிதனுக்கு அடுத்தவர்களைச் சுரண்டுவதற்கோ, செல்வந்தன் என்ற செருக்கினால் மமதைக் கொண்டிடவோ அல்ல என்றும் கூறுகின்றது. இறைவன் சொல்கின்றான்:

(அல்லாஹ்வாகிய) அவன்தான் உங்களைப் பூமியில் (தன்) பிரதிநிதிகளாக ஆக்கியுள்ளான். அன்றி, உங்களில் சிலரை மற்றோரைவிடப் பதவிகளில் உயர்த்தியுமிருக்கின்றான். இதன் மூலம் உங்களுக்குக் கொடுத்தவற்றில் (செல்வங்களில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிக்கின்றான். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும் நிச்சயமாக அவன் மிகப் பிழைபொறுப்போனும் பேரன்பு உடையோனுமாவான். (திருக்குர்ஆன்: 6:165) Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (2)

அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)

இஸ்லாத்தில் மனிதனின் பொருளாதார வாழ்வு, உறுதியான அடிப்படை, தெளிவான இறைவழி காட்டுதல் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானவற்றை நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது ஒருவனின் கடமை என்பது மட்டுமல்ல, மாட்சிமைமிக்க சிறந்த நற்குணமுமாகும்.

உழைத்திடும் திறன் இருந்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்தவர்களை அண்டிப் பிழைத்திடுவது மார்க்கத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். அது ஒரு அவமானமுமாகும். ஒரு முஸ்லிம் தனது உழைப்பாலேயே தனது வாழ்க்கையை நடத்திட வேண்டும். யாருக்கும் ஒரு சுமையாக அவன் இருந்திடக் கூடாது. இது இறைவனின் கட்டளையாகும். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)

அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.

உண்மையான முஸ்லிமின் சமுதாய வாழ்க்கை மிகவும் உயர்ந்த கொள்கைகளின் கீழ் அமைந்ததாகும். வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருந்திடும் விதத்தில் ஒரு முஸ்லிமின் தனிவாழ்வும், பொதுவாழ்வும் அமைக்கப்பட்டுள்ளன. வர்க்கப் போராட்டம், இனவேறுபாடுகள், தனிமனிதனின் சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்லது சமுதாயம் தனிமனிதனை ஆதிக்கம் செலுத்துவது இவைகளெல்லாம் இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவை. Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.

அத்தியாயம்-4. குடும்ப வாழ்வின் ஏனைய பகுதிகள்

நம்மிடம் வேலை செய்பவர்கள், நமது குடும்பத்தோடு இணைந்த ஏனைய உறுப்பினர்கள், உறவினர்கள், நம்மை அடுத்து வாழும் அண்டை வீட்டார்கள், இவர்களோடு நாம் அமைத்துக் கொள்ள வேண்டிய உறவின் முறையும் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடையதே. நிரந்தரமாக தங்களது வேலைகளுக்காக ஏவலர்களை அமர்த்தியிருப்பவர்கள், அந்த ஏவலர்களை தங்களுடைய சகோதரர்களைப்போல் நடத்திட வேண்டும் என்றும், அடிமைகளைப்போல் நடத்திடக் கூடாதென்றும் இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். ஏனெனில் யாரெல்லாம் தங்களுடைய ஏவலர்களை நல்ல முறையில் நடத்துகின்றார்களோ அவர்களது மரணத்தை இறைவன் மகிழ்ச்சியானதாகவும், எளிதானதாகவும் ஆக்கியருள்வான் என பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. குடும்ப வாழ்வின் ஏனைய பகுதிகள்