அத்தியாயம்-1. இஸ்லாம் என்பதன் பொருள்

இஸ்லாம் என்ற சொல்லானது ‘சில்ம்’ என்ற அரபி வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதற்குப் பல பொருள்களுண்டு. அவற்றில் சில சாந்தி, பரிசுத்தம், பணிவு, கீழ்படிதல் ஆகியவை ஆகும். மதம் என்ற கண்ணோட்டத்தில் இஸ்லாம் என்ற சொல்லுக்கு இறைவனுடைய ஆணைக்குப் பணிதல் என்றும், அவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிதல் என்றும் பொருள்.

இஸ்லாம் என்ற சொல்லின் மூலப்பொருளுக்கும், மதம் என்ற நோக்கில் அதற்கு இருக்கும் பொருளுக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இறைவனின் ஆணைக்கு அடிபணிதல், அவனுடைய சட்டத்திற்கு கீழ்படிதல் இவற்றின் மூலமே உண்மையான அமைதியை அடைய முடியும். நிலையான தூய்மையான, புனித நிலையை எய்த முடியும்.

சில மதத்தவர்கள் இஸ்லாத்தை ’முஹம்மதியம்’ என்றும், அதனை ஏற்றுக் கொண்டவர்களை ’முஹம்மதியர்கள்’ என்றும் அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் இப்படித் தங்களை அழைப்பதை நிராகரிப்பதோடு அவற்றை எதிர்க்கவும் செய்கிறார்கள். தங்களது மார்க்கத்தை ’முஹம்மதியம்’ என்றும் தங்களை ’முஹம்மதியர்கள்’ என்றும் பிரித்துக் கூறுவது பல தவறான கருத்துக்களை வளர்க்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இவ்வாறு தவறாக பெயரிடுவது, இஸ்லாம் என்பது மரணத்திற்குட்பட்ட வாழ்க்கையையுடைய முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது என்ற தவறான கொள்கையைத் தரும். இன்னும் ஏனைய ‘இஸம்’களான யூதாயிசம், (யூதமதம்) ஹிந்து இஸம், மார்க்சிஸம் போன்று இன்னொரு ‘இஸமே’ இஸ்லாம் என்றும் ஆகிவிடும். இந்த தவறான பெயர் ஏற்படுத்தக்கூடிய பிறிதொரு தவறான கருத்து என்னவெனில், முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தொழுபவர்கள் என்பதாகும். அதாவது கிருஸ்தவர்கள் எந்த முறையில் ஏசுநாதரிடம் விசுவாசம் கொண்டிருக்கிறார்களோ அதே முறையில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றார்கள் என்ற தவறான கருத்தை தந்துவிடும். முஹம்மதியம் என்ற சொல்லானது இஸ்லாம் முஹம்மத் (ஸல்) அவர்களால் தான் நிறுவப்பட்டது என்றும், ஆகையால் நிறுவியரின் பெயரால் அது அழைக்கப்படுகின்றது என்றும் தவறான பொருளை தந்துவிடும். இப்படி பொருள் கொள்வது பெரும் தவறுகளாகும். மிகத் தவறான எண்ணங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியவையுமாகும். இஸ்லாம் என்பது இன்னொரு ‘இஸம்’ அல்ல. முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்குவதுமில்லை. கிருஸ்தவர்கள், யூதர்கள், இந்துக்கள், மார்க்சிஸ்ட்டுகள் ஆகியோர் தங்களது தலைவர்களை பார்க்கும் அதே கண்ணோட்டத்தில் முஸ்லிம்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பார்ப்பதுமில்லை.

(முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்த போதிலும் அவர்களும் மரணத்திற்கு உட்பட்ட மனிதராகவே இருந்தார்கள். மரணமடையக் கூடியவர்களின் பெயரால் இஸ்லாம் அழைக்கப்படவில்லை. மரணம் அடையக் கூடியவர்களால் இஸ்லாம் தோற்றுவிக்கப்படவுமில்லை என்பதை வலியுறுத்தவே இங்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.)

முஸ்லிம்கள் இறைவனை மட்டுமே தொழுகிறார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் போதனைகளை உலக மக்களுக்கு எடுத்து சொல்லிடவும், அந்த இறைவனின் போதனைகளின்படி ஒரு வாழ்க்கையை நடத்திக்காட்டி ஒரு முன்மாதிரியாக அமைவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதரே ஆவார்கள். இறை அச்சத்திலும், இறைவனின் திட்டத்தின்படி வாழ்ந்து காட்டுவதிலும் அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

மனிதன் எந்த அளவிற்கு உயர்ந்தவனாக இருக்க முடியும் என்பதற்கும், நற்குணங்கள், நற்பண்புகள் இவற்றில் மனிதன் எத்துணை உன்னதமான நிலைக்கு உயரமுடியும் என்பதற்கும் அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள். Continue reading அத்தியாயம்-1. இஸ்லாம் என்பதன் பொருள்

7.தயம்மும்

பாகம் 1, அத்தியாயம் 7, எண் 334

நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். ‘பைதாவு’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை’ என்று முறையிட்டனர். அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயத்தின் வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) ‘அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)’ எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்”என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 7, எண் 335

‘எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Continue reading 7.தயம்மும்

கப்றும் திருவிழாக்களும்

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்)

தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. Continue reading கப்றும் திருவிழாக்களும்

பாடம் – 9

அல்லாஹ்வைத் தவிர ஏனையவர்களின் பெயரில் மிருகங்களை அறுத்தல்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்: ‘நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என (நபியே!) நீர் கூறுவீராக. அவனுக்கு யாதோர் இணையுமில்லை; (துணையுமில்லை) இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன்; இன்னும் (அவனுக்கு கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் (இந்த உம்மத்தில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக.)’ அல்குர்ஆன்:6.162-163.

‘ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.’ அல்குர்ஆன்:108.2.

அலி இப்னு அபிதாலிப் பின்வருமாறு சொன்னார்கள்: ‘அல்லாஹ்வின் நான்கு தீர்ப்புகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் எனக்குத் தெரிவித்தார்கள். அவையாவன:

1. அல்லாஹ்வைத் தவிர ஏனையவற்றின் பெயரில் அறுத்து குர்பானி செய்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;

2. தன் பெற்றோர்களை சபிப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;

3. அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாத ஒரு புதிய செயலை புகுத்தும் ஒருவனுக்கு அடைக்கலம் கொடுப்பவனை அல்லாஹ் சபிக்கிறான்;

4. காணிகளின் எல்லையை காட்டும் அடையாளங்களை மாற்றம் செய்யும் ஒருவனை அல்லாஹ் சபிக்கிறான்;

‘ஒரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால் சுவர்க்கம் சென்றான். இன்னொரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால்நரகம் சென்றான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அது எப்படி சாத்தியமானது யா ரசூலல்லாஹ்!’ என ஸஹாபாக்கள் வினவினார்கள். ‘தாம் வணங்கும் சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும் வரை, அதனை கடந்துச் செல்ல அனுமதி கொடுக்காத மக்கள் வாழ்ந்த இடத்தை இருவர் கடக்க நேரிட்டது. ஒரு மனிதரிடம் அந்த சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும்படி அவர்கள் கட்டளையிட்டனர். ‘காணிக்கை செய்ய என்னிடம் எதுவும் இல்லை’ என அவன் கூறினான். ஒரு ஈ அல்லது கொசுவாயினும் காணிக்கை செலுத்துமாறு அவர்கள் சொல்ல அவன் அந்த சிலைக்கு ஒரு கொசுவை காணிக்கை செய்தான். அக்காரணத்தால் அவன் நரக நெருப்பில் நுழைந்தான். மற்ற மனிதரையும் அச்சிலைக்கு எதையேனும் காணிக்கை செய்யும்படி வற்புறுத்திய போது ‘மகத்துவமும், கீர்த்தியுமிக்க அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும், எதற்கும், எதையும் காணிக்கை செய்ய மாட்டேன்’ என அவர் மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட அந்த மக்கள் அவரை கொலை செய்தார்கள். அந்த மனிதர் சுவர்க்கம் சென்றடைந்தார்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாரிக் பின் ஷிஹாப் அறிவிக்கிறார்கள். ஆதாரம்:அஹ்மத்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வுக்கன்றி ஏனையவற்றிற்கு தானம் அல்லது குர்பான் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்.

தன் பெற்றோர்களை சபிப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம் (ஒருவர் மற்றவருடைய பெற்றோரை சபித்தால், அவர் கோபம் கொண்டு இவருடைய பெற்றோரை சபிப்பார்).

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை புகுத்தும் முஹ்தித் ஒருவருக்கு அடைக்களம் கொடுப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம். இஸ்லாமிய மதத்தில் மாற்றம் செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளதாகும்.இதில் தலையிட்டு இஸ்லாத்தில் பித்ஆவை புகுத்தும் ஒருவருக்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்து பிரச்சனைகள் ஏற்பட்டால், அவருக்கு அடைக்களமும் கொடுப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம்.

காணிகளின் எல்லையை காட்டும் அடையாளங்களை மாற்றம் செய்து, அடுத்தவரின் இடத்தை வஞ்சகமாக பிடித்துக் கொள்பவருக்கு அல்லாஹ்வின் சாபம்.

ஒரு அற்ப கொசு எனினும் மகத்தான பாடம்.

ஒரு கொசுவை விக்கிரகத்திற்கு தானம் செய்து, நரகத்திற்குச் சென்ற மனிதன் நாட்டமின்றியே அதனை செய்தார். அதுவும் விக்கிரகங்களை வணங்குபவர்களின் ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே அதனை செய்தார்.

வெளிப்படையான ஒரு செயலையே காஃபிர்கள் செய்ய சொன்னாலும் அதனைக் கூட செய்ய மறுத்த மற்ற மனிதர் பொறுமையுடன் மரணத்தை ஏற்றுக் கொண்ட சம்பவம். இறை அச்சம் உள்ளவர்களுக்கு ஷிர்க் எவ்வளவு வெருப்பான செயல் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

நரகம் புகுந்த மனிதன் ஒரு முஸ்லிமாகும். அந்த மனிதன் காஃபிராக இருந்தால் ஒரு அற்ப கொசுவின் காரணமாக நரகம் புகுந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கமாட்டார்கள்.

‘நீங்கள் காலில் அணியும் காலணியை கட்டும் நாடாவை விட உங்களுக்கு மிக அருகில் சுவர்க்கம் உள்ளது. நரகமும் அதைப் போன்றதே’ என்ற நபிமொழியை இந்த சம்பவம் உறுதிப் படுத்துகிறது.

முஸ்லிமின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே விக்கிரக வணக்கம் புரிபவர்களின் முக்கிய நோக்கமாகும்.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.