வஸீலாவின் மூன்றாவது வகை*

வஸீலாவின் மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும். அதுவே நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைப் பொருட்டாக வைத்தும், மேலும் இவர்களைக் காரணம் காட்டியும், இவர்களை கொண்டு ஆணையிட்டும் அல்லாஹ்விடம் வஸீலா தேடுதல். இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும், ஸஹீஹான ஹதீஸும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளும் இமாம்களின் கொள்கைகளும் எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உலமாக்கள் மட்டுமே. பெரும்பாலான அறிஞர்கள் சிருஷ்டிகளைக் கொண்டு பிரமாணம் செய்து, ஆணையிட்டுப் பிரார்த்தித்தலை அனுமதிக்கவில்லை. Continue reading வஸீலாவின் மூன்றாவது வகை*

மஸ்ஜிதுன் நபவிக்குப் பயணமாகுதல்

நேர்ச்சைகள் செய்வது கடனைப் போன்றதாகும். கடனை திருப்பி ஒப்படைப்பது கட்டாயமாவதைப் போல நேர்ந்த கடன்களையும் திருப்ப வேண்டுமென அனைத்து இமாம்களும் கூறியிருக்கிறார்கள். எனவே நபியவர்களின் கப்றை நோக்கிப் பிரயாணம் செய்ய வேண்டுமென்று ஒருவர் நேர்ந்தால் அல்லது மற்ற நபிமார்கள், நன்மக்கள் ஆகியோருடைய கப்றுகளில் ஏதேனுமொன்றுக்குப் போக வேண்டுமென்று நேர்ந்தால் அதை நிறைவேற்றுதல் அவசியமில்லை. மாறாக அதை நிறைவேற்றினால் விலக்கப்பட்ட ஒரு அனுஷ்டானத்தைச் செய்தவனாகி விடுகிறான் என்று அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து அபிப்பிராயப் படுகிறார்கள். Continue reading மஸ்ஜிதுன் நபவிக்குப் பயணமாகுதல்

ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.

இங்கே முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். நபிமார்களையே ஷைத்தான் துன்புறுத்தவும், அவர்களுக்குத் தீங்குகளையும், அக்கிரமங்களையும் விளைவிக்கவும், அவர்களுடைய வணக்கவழிபாடுகளைக் கெடுத்து நாசம் பண்ணிடவும் தயாராவானானால் நபியல்லாத மற்றவர்களின் கதியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். (சாதாரணமான முஸ்லிம் மனிதனை ஷைத்தான் எப்படி ஆட்கொண்டு அடிமைப்படுத்தி விடுகிறான் என்பதைப் பகுத்துணர்ந்து பார்க்க வேண்டும்). நபியவர்கள் மனு-ஜின் இரு இனத்திலுள்ள அனைத்து ஷைத்தான்களையும் அடித்து அமர்த்துவதற்குரிய ஆற்றலை பெற்றிருக்கிறார்கள். அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் அறிவையும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறான். பற்பல வணக்கவழிபாடுகள், திக்ருகள், (இறை தியானங்கள்) பிரார்த்தனைகள், இறைவனின் பாதையில் போராடுதல் (ஜிஹாதுகள்) போன்ற எத்தனை எத்தனையோ வணக்கங்கள், வழிபாடுகளின் பேருதவியால் ஷைத்தனைப் பிடித்தடக்கி, ஒடுக்கும் திறமை நபிமார்களுக்குண்டு. Continue reading ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.

காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு ஸியாரத்தும் நபிகளார் மூலம் அறியப்பட்டுள்ளது. அதுவே காஃபிர்களின் கப்றை ஸியாரத் செய்வது என்பது. காஃபிர்களின் சமாதிகளை ஸியாரத் செய்வது குறித்து ஏராளமான ஹதீஸ்களை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம்களான முஸ்லிம், அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா போன்ற ஹதீஸ் அறிஞர்களின் தொகுப்புகளில் காணப்படுகின்றன. Continue reading காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?

முஸ்லிம்களின் கப்றுகளை ஸியாரத் செய்வது எப்படி?

கப்று (சமாதி) தரிசனம் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அமைப்பாகும். அனுமதிக்கப்படாத நூதன முறையில் அனுஷ்டிக்கப்படும் அமைப்பு மற்றொன்று. இப்படி ஸியாரத் இரு வகைப்படும். ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்ட ஸியாரத்திற்கு நமது இஸ்லாம் விளக்கம் தரும்போது ‘எந்த ஸியாரத்தினால் ஸியாரத் செய்கிறவனின் எண்ணம் கப்றாளிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்’ என்று அமைகிறதோ அதுவே ஷரீஅத்தில் அனுமதிக்கப்படுகிற ஸியாரத்தாகும். மனிதன் இறந்ததன் பின் (ஜனாஸா) தொழுகை நடத்துகிறோமென்றால் அத்தொழுகையின் உட்கருத்து ஜனாஸாவுக்காக பிரார்த்தனை புரிவதாகும். Continue reading முஸ்லிம்களின் கப்றுகளை ஸியாரத் செய்வது எப்படி?