2.ஈமான் எனும் இறைநம்பிக்கை

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 8

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 9

‘ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 10

‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். Continue reading 2.ஈமான் எனும் இறைநம்பிக்கை

இறைவன் அனுமதித்தவை

எதை அல்லாஹ்வும், அவன் ரஸூலும் விலக்கினார்களோ அது ஹராம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அனுமதித்தவை அனைத்தும் ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் அல்லாஹ், ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். அவர்கள் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதை திருமறையும் விளக்குகிறது: “அவர்கள் (மெய்யாகவே) விசுவாசிகளாக இருந்தால் அவர்களைத் திருப்திப் படுவதற்கு அல்லாஹ்வும், ரஸூலும் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்)”. (9:62) Continue reading இறைவன் அனுமதித்தவை

பாடம் – 2. பாடம் – 3

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து

1. வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதரும் நபிமார்களின் முத்திரையாகவும் வந்தார்கள் என்றும் உள்ளத்தில் விசுவாசம் கொண்டு நாவால் மொழிதல்.
2. ஐங்காலத் தொழுகையை தவறாது நிறைவேற்றல்.
3. ஜகாத் என்னும் ஏழை வரியை வருடம் தோரும் செலுத்துதல்.
4. ரமலான் மாதம் நோன்பு நோற்றல்.
5. வாழ்க்கையில் ஒரு முறையேனும் (வசதி இருப்பின்) ஹஜ் யாத்திரை செய்தல். Continue reading பாடம் – 2. பாடம் – 3