ரமலான் ஆசிர்வதிக்கப்பட்ட மாதம்!!

ரமளான் என்ற நம்முடைய மரியாதைக்குரிய விருந்தாளி வருடம் ஒரு முறை நம்மை நோக்கி வருகின்றது. இந்த மாதம் தான் இறைவனிடமிருந்து நமக்கு கருணையையும் மற்றும் மன்னிப்பையும் பெற்றுத் தரக் கூடிய மாதமாக இருக்கின்றது. நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த மாதத்தின் வருகையைப் பற்றிய செய்தியை மக்களுக்கு இவ்வாறு அறிவிப்பவர்களாக இருந்தார்கள் :

அறிந்து கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஒரு மிகப்பெரிய ஆசிர்வதிக்கப்பட்ட மாதம் ஒன்று வந்து  இருக்கின்றது. அல்லாஹ் அந்த மாதத்தில் நோன்பு நோற்பதை உங்களுக்கு கடமையானதொன்றாக ஆக்கி வைத்திருக்கின்றான், மற்றும் அதன் இரவுத் தொழுகையை விரும்பத்தக்கதாக ஆக்கி இருக்கின்றான். வந்திருக்கக்கூடிய கூடிய அந்த மாதத்தில் ஒரு இரவு இருக்கின்றது, அந்த ஒரு இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது (அதாவது, அந்த ஒரு இரவில் செய்யக் கூடிய வணக்கமானது, அதே வணக்கத்தை இடைவிடாது ஆயிரம் மாதங்கள் செய்வதற்குச் சமமாக இருக்கின்றது.) அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஒருவர் அந்த மாதத்தில் ஒரு நல்லதைச் செய்து கொள்ளட்டும், அந்த நன்மையான அந்த நல்லகாரியத்தைச் செய்பவர் ஒரு கடமையாக்கப்பட்டதொரு அமலைச் செய்தவராகக் கருதப்படுவார், மேலும் அந்த மாதத்தில் யாரொருவர் கடமையானதொரு அமலைச் செய்கின்றாரோ அவர் பிற மாதத்தில் அதே அமலைச் செய்ததைப் போல 70 மடங்கு கூலியைப் பெற்றுக் கொள்வார். இது ஒரு சகிப்புத் தன்மை மிக்கதொரு மாதம், அந்த சகிப்புத் தன்மைக்குரிய கூலி, இறைவன் வழங்கவிருக்கும் சொர்க்கமேயாகும். மேலும் இது ஒரு சமத்துவமிக்கதொரு மாதமாகும், இந்த மாதத்தில் இறைநம்பிக்கையாளர்கள் செய்யக் கூடிய அமல்களின் காரணமாக அவர்களது (மறுமைப் பயணத்திற்கான தேவைகள்) நன்மைகள் பன்மடங்காகப் பெருகுகின்றன. யாரொருவர் நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கு உணவளிக்கின்றாரோ அல்லது குடிப்பதற்குப் பானங்கள் வழங்குகின்றாரோ, அவருக்கு அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, அவரது தோள்கள் நரக நெருப்பில் கருகுவதனின்றும் காக்கப்படுகின்றன, மேலும், அந்த நோன்பு திறப்பதற்காக ஒருவர் நோன்பாளிக்கு உணவளிப்பதனால், நோன்பு நோற்றவருக்கு வழங்கப்பட இருக்கின்ற நன்மைகளில் எதுவொன்றும் குறைத்து விடவும் மாட்டாது, அவருக்குரிய கூலியே அவருக்கு எந்தவித குறையும் இன்றி வழங்கப்படும். நம் அனைவராலும் நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கு உணவளிக்க முடியாதே என்று மக்கள் தங்களது இயலாமையின் காரணமாக மன வேதனையுடன் கூறுவதைக் காண்கின்றோம்.

ஆனால் இறைவன் கூறுகின்றான், நோன்பாளி நோன்பு திறப்பதற்காக நீங்கள் கொடுக்கும் ஒரு தம்ளர் பானம் – அதாவது பால், தண்ணீர், அல்லது ஒரு பேரீச்சம் பழத்திற்குக் கூட அதற்கான கூலியை இறைவன் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றான். உங்களில் யாரொருவர் ஒரு நோன்பாளி நோன்பு திறப்பதற்காக முழு உணவு வழங்குகின்றாரோ அல்லது பானம் வழங்குகின்றாரோ, அத்தகைய நபர்களுக்கு மறுமை நாளிலே யாருடைய உதவியும் கிடைக்காத அந்த நாளிலே இறைவன் தன்னுடைய கவ்தர் தடாகத்திலே நீரருந்தச் செய்வான், அந்த கவ்தர் தாடகத்திலே நீரந்திய ஒருவருக்கு அவர் சொர்க்கச் சோலையிலே புகும் வரைக்கும் தாகமென்பதே எடுக்காது. இந்த ரமளான் மாதத்தில், நீங்கள் அநேகமான நான்கு கட்டளைகளைக் கட்டாயமாகப் பின்பற்றி வேண்டியதிருக்கும். அதில் இரண்டு கட்டளைகள் உங்களது இறைவனுடைய நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள அவனுக்கு உகந்தவாறு செயல்படுதல், அடுத்த இரண்டு மிகவும் இன்றியமையாத அமல்களாகும். முதல் இரண்டும் நீங்கள் எடுத்துக் கொண்ட ஈமானின் பிரகாரம் – அந்தக் கலிமாவின் பிரகாரம் உங்களை இறைவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் பட்டவர்களாக நடத்தல் மற்றது, இறைவனிடம் பாவ மன்னிப்பு வேண்டுதல். அடுத்து உள்ள இன்றியமையாத கடமைகளாவன : சொர்க்கச் சோலைகளில் நம்மை சேர்த்து விடுவதற்கு இறைவனிடம் மன்றாடுதல் மற்றும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் ஆகியவைகளாகும். (பின் குஸைமா)

இந்த ரமளான் மாதத்து நோன்பு என்பது மற்ற கடமைகளைப் போல பிறரது கண்ணுக்குத் தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியதொரு அமலல்ல. இதனால் தான் இறைவன் கூறுகின்றான் : இந்த நோன்பானது எனக்குரியது, என்று கூறுகின்றான். ஏனென்றால் இந்தக் கடமையாக்கப்பட்ட நோன்பானது, நோன்பை நோற்கின்றவருக்கு மட்டுமே அறிந்திருக்கக் கூடிய தனிப்பட்டதொரு அமலாகும். நோன்பு வைத்திருக்கின்றவர் நோன்பாளியா அல்லது நோன்பாளி இல்லையா என்பதை அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்தவனாக இருக்கின்றான். முற்றும் தொழுகை, ஹஜ், ஜக்காத் போன்றவற்றை மற்ற அனைவராலும் அறிந்து கொள்ள இயலுவது போல, நோன்பை மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது.

நோன்பானது ஒரு மனிதனுடைய சகிப்புத் தன்மைக்கு வைக்கப்படும் தேர்வாக இருந்து கொண்டிருக்கின்ற அதே வேளை, சுய ஒழுக்கத்தின் அடிப்படையில் நோன்பானது முஸ்லிம்களிடையே சமத்துவத்தைப் போதிக்கின்றது, அதன் மூலம் அவர்கள் ஒரே நேரத்தில் நோன்பை வைக்கின்றார்கள், மற்றும் ஒரே நேரத்தில் நோன்பைத் திறக்கின்றார்கள், நோன்பு வைக்கக் கூடிய அவர்கள் ஏழையாக இருந்தாலும் அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் சரியே, அல்லது அவர்கள் வெள்ளை நிறமுடையவராகவோ அல்லது கறுப்பு நிறமுடையவராவோ இருந்தாலும் சரியே. இது இஸ்லாத்தில் மட்டுமே இருக்கின்ற குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும். ஓருவர் நோன்பு நோற்றிருக்கும் பொழுது அவர் பசியை உணர்கின்றார், அவர் உணர்கின்ற அந்தப் பசி மற்றும் தாகமானது, அல்லாஹ்வினுடைய அந்த அன்பைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லாமல், வேறு எதற்காகவும் அந்த நோன்பை அது தரும் பலவீனத்தை, தாகத்தை, பசியைப் பொறுத்துக் கொள்பவராக அவர் இல்லை.

Tamil Islamic Library

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , , . Bookmark the permalink.