மனிதன் அல்லாஹ்வின் மீது கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் அவனுக்கே கேடாக ஆகி விடுகிறது!

21:11. மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம். அதற்குப் பின் (அங்கு) வேறு சமுதாயத்தை உண்டாக்கினோம்.

21:12. ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.

21:13. “விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுகபோகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது)

21:14. (இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.

21:15. அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தளிவது போன்று அவர்களை நாம் ஆக்கும்வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.

21:16. மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.

21:17. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றிலிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தைகொண்டு, அசத்தித்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்து விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

அல்குர்ஆன்: அல் அன்பியா – நபிமார்கள்.
This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.