ஹுதமா, ஹாவியா, ஜக்கூம்?

கேள்வி எண்: 113. ஹுதமா, ஹாவியா, ஜக்கூம் என்று குர்ஆன் எவற்றைக் கூறுகிறது?

பதில்: ஹுதமாஎரிந்துக் கொணடிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பு: அது உடலில் படடதும் இதயங்களில் பாயும்: சூரத்துல் ஹுமஜா (104-4,5,6,7)

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். (104:4)

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?  (104:5)

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். (104:6)

அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். (104:7)

ஹாவியா-அது சுடடு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும். சூரத்துல் அல் காரிஆ (101-8,9,10,11)

ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- (101:8)

அவன் தங்குமிடம் “ஹாவியா” தான். (101:9)

இன்னும் (‘ஹாவியா’) என்ன என்று உமக்கு அறிவித்தது எது? (101:10)

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
(101:11)

ஜக்கூம்-இது நரகத்தில் உள்ள கள்ளி மரமாகும்: நரகவாசிகளின் விருந்தாகும்: அம்மரம் நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும்: அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும். அஸ் ஸாஃப்பாத் (37:61-66)  அத் துகான் (44:43-46), மற்றும் அல் வாகியா (56:52, 53)

அஸ் ஸாஃப்பாத் (37:61-66)

அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) ‘ஜக்கூம்’ என்ற மரமா? (37:62)

நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
(37:63)

மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும். (37:64)

அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும். (37:65)

நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள். (37:66)

அத் துகான் (44:43-46)

நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). (44:43)

பாவிகளுக்குரிய உணவு. (44:44)

அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும். (44:45)

வெந்நீர் கொதிப்பதைப் போல்.
(44:46)

அல் வாகியா (56:52, 53)

ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள். (56:52)

ஆகவே, “அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
(56:53)

Leave a Reply