வினாவும் விடையும்

வினா: இஸ்லாமிய மார்க்கத்தின் இமாம்களான அறிஞர்களிடம் கீழ்வரும் மஸ்அலா பற்றி கேட்கப்படுகிறது. அதாவது நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு வஸீலா தேடி அவர்களிடம் ஷபாஅத்தை வேண்டுவதில் அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததுமான முறைகளையும், அதன் விதிகளையும் விளக்க வேண்டும்.

விடை: அகிலத்தைப் படைத்து க் காக்கும் அல்லாஹ்வுக்கே புகழெல்லாம். நபி (ஸல்) அவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்று சிருஷ்டிகள் தேவைபட்டதற்கப்பால் அவர்களுக்கு ஷபாஅத் செய்வார்கள் என்பது அனைத்து அறிஞர்களாலும் ஏகோபித்து கூறப்பட்டிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் தம் சமூகத்தை சேர்ந்த பெரும் பாவிகளுக்கும், பொதுவாக அனைத்து மக்களுக்கும் சிபாரிசு செய்வார்கள். இதுவும் ஸஹாபிகள், தாபியீன்கள் மற்றும் அனைத்து ஸுன்னத் ஜமாத்தைச் சேர்ந்தவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.

அன்றி நபி (ஸல்) அவர்களுக்கு தனிப்பட்ட ஷபாஅத்துகளும் (சிபாரிசுகளும்) இருக்கின்றன. இந்த ஷபாஅத் நபியவர்களுக்கே உரித்தானது. வேறு எந்த சிருஷ்டிக்கும் கிடையாது. இன்னொரு வகை ஷபாஅத்தும் நபி (ஸல்) அவர்களுக்கும் உண்டு. இந்த வகையில் மற்ற நபிமார்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் பங்குண்டு. ஆனால் மேற்குறிப்பிட்ட பெருமானாருக்கே உரிய ஷபாஅத் இதர நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை விடவும் மேன்மையானது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சிருஷ்டிகளின் மேன்மைக்கும், மதிப்புக்கும் உரியவர்களல்லவா! மறுமையில் ஏனைய நபிமார்களின் மேன்மை, சிறப்பு, பெருமை ஆகியவையெல்லாம் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குரிய சிறப்பைக் காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும். அல்லாஹ் அவர்களுக்கு அளித்த சிறப்பம்சங்களைக் கூற முடியாது. அத்தகைய தூரம் அதிகமுண்டு. பெருமானார்க்கு மறுமையில் இறைவன் மகாமுல் மஹ்மூத் எனும் பெருமைக்குரிய பதவியைக் கொடுப்பான். இந்தப் பதவி தமக்குக் கிடைக்காதா என்று தொன்று தொட்டே தோன்றியவர்களும், மேலும் வரப்போகிறவர்களும் ஆசைப் படுகிறார்கள். பெருமானாரின் ஷபாஅத்துகளை நிரூபித்துக் காட்டுகின்ற எத்தனை எத்தனையோ ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் மற்றும் நம்பத்தகுந்த கிரந்தங்களிலும் காண முடியும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.