பாடம் – 11

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும்.

“இன்னும் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர் ஜின்களில் உள்ள ஆண்கள் பலரிடம் (தங்களை) காக்கத் தேடிக் கொண்டிருந்தனர் இதனால் அவர்கள் (ஜின்கள்) அவர்களை (மனிதர்களை) பாபத்திலும் இறையச்சமற்ற தன்மையில் கர்வத்தையும் அதிகமாக்கி விட்டார்கள்.” என அல்லாஹ் கூறுகிறான். (72:6)

“ஒரு தங்குமிடத்தில் நுழையும் போது ‘அல்லாஹ்வின் வார்த்தைகளில் (படைப்பினங்களின்) தீங்குகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்,’ என யாரேனுமொருவர் கூறினால் அவர் அந்த இடத்தை விட்டு நீங்கும் வரை அவரை எந்தத் தீங்கும் அணுகாது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அறிவித்ததாக ஹவ்லா பின்த் ஹாகிம் தெரிவிக்கிறார். ஆதாரம்: முஸ்லிம்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கை சார்ந்த ஒரு செயலாகும்.

இப்படிப்பட்ட காரியங்களின் உதவிகள் மூலம் உலகலாவிய ஒரு சில விஷயங்களில், சில சந்தர்ப்பங்களில், லாபமும், வெற்றியும் பெறவோ அல்லது சில தீங்குகளை அல்லது நஷ்டங்களை விட்டும் பாதுகாப்புப் பெறவோ சிலருக்கு முடிந்த ஒரே காரணத்தால் இக்காரியங்களில் ஈடுபடுவது ஷிர்க்கை விட்டும் நீங்கியவை என்று ஒருவரும் கருதக் கூடாது.

மேற்குறிப்பிட்ட ஹதீஸின் ஆதாரத்தின் மூலம் அல்லாஹ்வின் வார்த்தைகள் அவனுடைய படப்பினங்களல்ல என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதன் அடிப்படையில் படைப்பினங்களின் பாதுகாப்பை நாடும் காரியம் ஷிர்க்காகும்.

மேற்குறிப்பிட்ட துஆ மிகச்சிறியதாயினும் பெரும் மகத்துவம் மிக்கது.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

This entry was posted in முக்கிய பாடங்கள் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.