உண்மை முஸ்லிமின் செயல்கள்.

வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கிஅவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும்; உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.

இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன் தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவ்ர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதாட)ட முற்பட்டால், “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

இன்னும் அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா (சிர வணக்கம்) செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

எங்கள் இறைவனே! எங்களை விட்டும் நரகத்தின் வேதனயைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.

நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

இன்னும், அவ்ர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்ய மாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும் இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்க மாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவ்ர்கள் நியாயமுன்றிக் கொல்லமாட்டார்கள். விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

கியாம(இறுதி தீர்ப்பு) நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கி விடுவர்.

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து ஈமான்(நம்பிக்கை) கொண்டு ஸாலிஹான (நல்ல) செய்கைகள் செய்கிறார்களோ-அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.

இன்னும், எவர் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து ஸாலிஹான (நல்ல) செய்கைகள் செய்கிறாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.

அன்றியும், அவர்கள் பொய் ச்சட்சி சொல்ல மாட்டார்கள்: மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள்.

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)

மேலும் அவர்கள்: எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தி உடையவர்களுக்கு எங்களை இமாமாக-வழிகாட்டியாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு (ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர் கொண்டழைக்கப்படுவார்கள்.

அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.

(நபியே-தூதரே) சொல்வீராக: உங்களுடைய பிரார்த்தனை இல்லா விட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்; ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.

அல் குர்ஆன்: 26-61முதல்77வரை

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.