Monthly Archives: July 2008

அல்லாஹ்வின் மீதே தவக்குல் வைத்தல்.

1470. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on அல்லாஹ்வின் மீதே தவக்குல் வைத்தல்.

இயேசு குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

ஈஸா (அலை)  – இயேசு – ஜீஸஸ் என்று வழங்கப்படும் இயேசு கிறிஸ்து அவர்களை முஸ்லிம்கள் மதிக்கின்றனர். உயர்ந்த அந்தஸ்தில் வைத்து அவரைப் போற்றுகின்றனர். அதுமட்டுமல்ல, இந்த உலகில் அவருடைய இரண்டாவது வருகையை நம்புகின்றனர். மனித குலத்துக்கு இறைவன் அனுப்பிய தூதர்களில் ஒருவராக அவரை நம்புகின்றார்கள். அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்கள் அவரை வெறுமனே ஜீஸஸ் என்றோ, … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on இயேசு குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்.

நபிமார்கள் சிறப்புகள் 1468. ‘அஸர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். மக்கள் உளூச் செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையை வைத்து அப்பாத்திரத்திலிருந்து உளூச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்.

நபி (ஸல்) அவர்களின் கனவுகள்.

1463. ‘நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது, ‘வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!’ என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்’ என்று … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நபி (ஸல்) அவர்களின் கனவுகள்.

முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது?

கேள்வி எண்: 91. முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துவது ஏன்?

Posted in கேள்வி பதில் | 1 Comment

கனவுகளுக்கு விளக்கமளித்தல்.

1462. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on கனவுகளுக்கு விளக்கமளித்தல்.

கனவில் என்னைக் (நபியை) கண்டவர்….

1461. ‘கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. புஹாரி :6993 என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:”நபி (ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி (ஸல்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on கனவில் என்னைக் (நபியை) கண்டவர்….

இதர மதங்களை சகித்துக் கொள்கிறதா இஸ்லாம்?

திருக்குர்ஆன் கூறுகின்றது:- தீன் – இறைமார்க்கம் தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ – உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களை தடுப்பதில்லை! திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான் திருக்குர்ஆன்: 3:42-47. சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம் அல்லாத மக்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது இஸ்லாமிய ஆட்சியின் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on இதர மதங்களை சகித்துக் கொள்கிறதா இஸ்லாம்?

நல்ல, தீய கனவுகள் பற்றி….

கனவுகள். 1456. ”(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தான் இடமிருந்து வருவதாகும். எனவே நீங்கள் வெறுக்கிற ஒரு விஷயத்தைக்(கனவில்)கண்டால் கண் விழிக்கும்போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால் அது அவருக்கு தீங்கிழைக்காது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5747 அபூ கத்தாதா … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on நல்ல, தீய கனவுகள் பற்றி….

கீழிருக்கும் ஹதீஸுடைய அறிவிப்பாளர் பெயரைக் கூறுக?

கேள்வி எண்: 90. ‘அல்குர்ஆனை ஞானத்துடன் (பொருளுணர்ந்து) ஓதுபவர் மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட, கண்ணியமிக்க தூதர்களாகிய மலக்குகளுடன் இருப்பார். குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இருமடங்கு கூலி உண்டு’  புகாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பெயர் என்ன?

Posted in கேள்வி பதில் | Comments Off on கீழிருக்கும் ஹதீஸுடைய அறிவிப்பாளர் பெயரைக் கூறுக?