Monthly Archives: October 2006

மாதவிடாயின் போது….

174- எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எனது மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். புகாரி-297: ஆயிஷா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாயின் போது….

எக்காலத்திலும் முறியடிக்க முடியாத இறை சவால்!

“இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 17:88)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on எக்காலத்திலும் முறியடிக்க முடியாத இறை சவால்!

மாதவிடாயின் போது மனைவியுடன்….

173- எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை அணைப்பார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களின் தலையை கழுவுவேன் புகாரி-2030 – 2031: ஆயிஷா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாயின் போது மனைவியுடன்….

அனைத்து மார்க்கத்தையும் மிகைத்த இஸ்லாம்!

அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான்.முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள் இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே ( அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்). (அல்குர்ஆன்: 9:33)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அனைத்து மார்க்கத்தையும் மிகைத்த இஸ்லாம்!

6. ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?

சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் எதுவும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீர்கள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர் – ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on 6. ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?

உற்று நோக்கவேண்டிய அவனின் அத்தாட்சிகள்

அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரித்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக் குலைகளும் இருக்கின்றன; திராட்சை தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உற்று நோக்கவேண்டிய அவனின் அத்தாட்சிகள்

மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை…

172-நபி (ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். நான் அதை வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வர மாட்டார்கள். புகாரி-2029: ஆயிஷா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை…

அனைத்துக்கும் சொந்தக்காரன்!

வானங்களுடையவும், பூமியுனுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான். (அல்குர்ஆன்: 5:120)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அனைத்துக்கும் சொந்தக்காரன்!

நான் வணங்கத் தகுதியான இறைவன்!

“என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அவனையன்றி (மற்றெதனையும், எவரையும்) இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு அதில் ஒன்றையுமே என்னை விட்டுத் தடுத்துவிடாது. அதிலிருந்து என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது”. (அல்குர்ஆன்: 36:22-23)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நான் வணங்கத் தகுதியான இறைவன்!

யாவரையும் மிகைத்தவன் அல்லாஹ்!

அவன் தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குப்படுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹ் (துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 60:24)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on யாவரையும் மிகைத்தவன் அல்லாஹ்!