Monthly Archives: September 2006

எவ்வாறு மிஸ்வாக் செய்வது?

143-நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் சென்றிருந்தேன் அப்போது அவர்கள் தமது கையிலுள்ள ஒரு குச்சியால் பல் துலக்கும் போது உவ், உவ் என்று சொல்வதை நான் கண்டேன். குச்சியோ அவர்களது வாயில் இருந்தது. இவ்வாறு செய்தது அவர்கள் வாந்தி எடுப்பது போல் இருந்தது. புகாரி-244: அபூ முஸா அஷ்அரி (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on எவ்வாறு மிஸ்வாக் செய்வது?

இத்தனை குற்றத்திற்கு பிறகு சிபாரிசு பயனளிக்குமா?

சுவனத்திலிருப்பவர்கள் நரகவாதிகளைப் பார்த்து உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என முஷ்ரிக்குகளான குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘நாங்கள் தொழக்கூடியவர்களில்லை. ஏழைகளுக்கு நாங்கள் ஆகாரமளிக்கவில்லை. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் சேர்ந்து நாமும் வீணில் மூழ்கிக் கிடந்தோம். கூலிகள் வழங்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். நாங்கள் மரணித்து இதை உறுதியாகக் காணும் வரையில் இவ்வாறே இருந்தோம்’ … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இத்தனை குற்றத்திற்கு பிறகு சிபாரிசு பயனளிக்குமா?

பல் துலக்குதல் பற்றி…

142-என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-887: அபூஹூரைரா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பல் துலக்குதல் பற்றி…

குருடனும், பார்வையுடையவனும் சமமா?

(நபியே அவர்களிடம்:) “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ் தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்துக் கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்.” மேலும் கூறும்: குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on குருடனும், பார்வையுடையவனும் சமமா?

புறம் பேசுதல்

முஸ்லிம்களைப் புறம் பேசுவதும் அவர்களின் கண்ணியத்திற்கும் மான மரியாதைக்கும் இழுக்காகப் பேசுவதும் பெரும்பாலான சபைகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக ஆகிவிட்டது. புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அதை விட்டும் தன் அடியார்களை விலகியிருக்கச் செய்திருக்கிறான். மனித உள்ளங்கள் அருவருப்பாகக் கருதுகின்ற விதத்தில் அதற்கு ஓர் உவமானம் கூறியுள்ளான்: “உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on புறம் பேசுதல்

கழுவி சுத்தம் செய்தலின் பலன் பற்றி…

141-பள்ளிவாசலின் மேற்புறத்தில் அபூஹூரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹூரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) நிச்சயமாக எனது சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவுடைய சுவடுகளால் முகம், கை, கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே உங்களில் எவருக்குத் தமது ஒளியை (அவர் உளூ செய்யும் உறுப்புகளில்) நீளமாக்கிக் கொள்ள … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கழுவி சுத்தம் செய்தலின் பலன் பற்றி…

அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காக…

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (அல்குர்ஆன்: 38:29)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காக…

குதிகால்களை சரியாக கழுவாதவர்களுக்கு…

140- மக்கள் உளூ செய்யும் தொட்டியிலிருந்து உளூ செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹூரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) உளூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக அபுல்காஸிம் (முஹம்மத்) (ஸல்) அவர்கள், குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான் என்று கூறினார்கள் என்றார்கள். புகாரி-165: முஹம்மது பின் ஸியாத் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குதிகால்களை சரியாக கழுவாதவர்களுக்கு…

நாம் நன்றி செலுத்தத் தகுதியானவன்!

இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் (அருளால்) உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத்தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன்: 28:73)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நாம் நன்றி செலுத்தத் தகுதியானவன்!

நாம் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதிலிருந்து நீங்குவது எப்படி?

நாம், ஷிர்க்கில் மூன்று வகைகளைத் தவிர்ப்பதைக் கொண்டல்லாமல், அல்லாஹ்வுக்கு இணைவைப்பதிலிருந்து நீங்கியவர்களாக ஆகமாட்டோம். இரட்சகனு (அல்லாஹ்வு)டைய செயல்களில் இணைவைத்தல்:- படைக்கக் கூடியதாகவோ, நிர்வகிக்கக் கூடியதாகவோ அல்லாஹ்வுடன் வேறெவரும் இருப்பதாக நம்புதல். இந்த நம்பிக்கை, அல்லாஹ் உலக நிர்வாகங்களில் சிலவற்றை சில அவுலியாக்களிடம் ஒப்படைத்துள்ளதாக, சில சூபிய்யாக்கள் நம்புவது போன்றாகும். இந்த நம்பிக்கை இஸ்லாத்துக்கு முன்னிருந்த முஷ்ரிக்குகளிடம் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on நாம் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதிலிருந்து நீங்குவது எப்படி?