Monthly Archives: July 2006

கோள்கள் பால்வீதியில் தவழும் அமைப்பு பற்றி..

வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன். (அல்குர்ஆன் 25:61)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கோள்கள் பால்வீதியில் தவழும் அமைப்பு பற்றி..

இறைவனின் ஏற்பாடு

வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் 15:16)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இறைவனின் ஏற்பாடு

ஒரே நீரிலிருந்து பெறப்படும் பல்வேறு சுவைகள் பற்றி..

இன்னும், பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on ஒரே நீரிலிருந்து பெறப்படும் பல்வேறு சுவைகள் பற்றி..

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும்

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன் 1:4)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும்

கண்மூடி பின்பற்றாதீர்!

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:66-67)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கண்மூடி பின்பற்றாதீர்!

அமானித மோசடியும் குழப்பங்கள் தோன்றுவது குறித்தும்…

87- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நன்பகத் தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கின்றேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ் மனதில் (அமானத் எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அமானித மோசடியும் குழப்பங்கள் தோன்றுவது குறித்தும்…

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்

(அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மத்) இவர் ஹிஜ்ரி 1115ம் ஆன்து நஜ்திலே (இன்றைய புதிய பெயர் ரியாத்) உள்ள ‘அல் உயைனா’ என்ற ஊரில் பிறந்தார். பத்து வயதை அடையுமுன்னர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். அவருடைய தந்தையிடத்தில் ஹன்பலி பிக்ஹை (சட்டக்கலையை)க் கற்றார். பல ஊர்களிலுமுள்ள ஆசியர்களிடம் தப்ஸீரையும் ஹதீஸையும் கற்றார். குறிப்பாக மதீனா … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்

இறைவனிடம் உதவி தேடுங்கள்!

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன்: 2:153)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இறைவனிடம் உதவி தேடுங்கள்!

குடிமக்களை காக்கத் தவறிய ஆட்சியாளன்

சமுதாயத்தை ஏய்க்கும் ஆட்சியாளன் பெறும் தண்டனை குறித்து………. 86- நபி (ஸல்) அவர்கள், ஓர் அடியானுக்குக் குடிமக்களை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான் என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள். புகாரி-7150: மஅகில்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குடிமக்களை காக்கத் தவறிய ஆட்சியாளன்

அல்லாஹ்வின் கயிறு!

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்கிறாரோ, அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2;256)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்வின் கயிறு!