Monthly Archives: March 2006

அல்லாஹ்வின் திருத்தூதரை நேசிப்பது

அல்லாஹ்வின் திருத்தூதரை ஒருவரின் குடும்பம் பிள்ளைகள், தந்தை பிற மனிதர்கள் ஆகியோரைக் காட்டிலும் அதிகம் நேசிப்பது 27- நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை அவரது குழந்தைகள் ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும் வரை அவர்(உண்மையான)ஈமான் கொண்டவர் ஆகமாட்டார். புகாரி-15: அனஸ்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அல்லாஹ்வின் திருத்தூதரை நேசிப்பது

ஈமான் கொண்டவர் அதன் சுவையை..

ஈமான் கொண்டவர் அதன் சுவையை உணர்தல் 26- எவரிடம் மூன்று தன்மைகளக் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுமையை உணர்ந்தவராவார்(அவை)அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-16: அனஸ்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஈமான் கொண்டவர் அதன் சுவையை..

இஸ்லாத்தில் சிறந்தது காரியங்களில் சிறந்தது

இஸ்லாத்தில் சிறந்தது எது? காரியங்களில் சிறந்தது எது? 24- ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், (பசித்தோருக்கு)நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்று கூறினார்கள்.புகாரி-12: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) 25- அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இஸ்லாத்தில் சிறந்தது காரியங்களில் சிறந்தது

ஈமான் என்றால் என்ன?

ஈமான் என்றால் என்ன? அதன் தன்மைகள் யாவை? 5- நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on ஈமான் என்றால் என்ன?

மனைவியருக்கிடையில் அநீதமாக நடத்தல்

அல்லாஹ் தனது வேதத்தில் நமக்கு அறிவுறுத்திய விஷயங்களில் மனைவியருக்கிடையே நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நேர்மையாக நடந்து கொள்வது சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள். நீங்கள் உங்கள் நடத்தையைச் சீராக்கிக் கொண்டு … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on மனைவியருக்கிடையில் அநீதமாக நடத்தல்

ஈமானின் அநேக கிளைகள்

21- ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-9: அபூஹூரைரா(ரலி) 22- அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர்(அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி(ஸல்)அவர்கள் சென்றார்கள். உடனே,அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஈமானின் அநேக கிளைகள்

ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவர்

எந்த வித சந்தேகமுமின்றி ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவாறு அல்லாஹ்வைச் சந்திப்பவர் சுவனில் நுழைவார். அவரை நரக நெருப்பு தீண்டாது. 17- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் ஈஸா(அலை)அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன(ஆகுக! என்னும்) ஒரு வார்த்தை(யால் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவர்

ஈமானின் முதல் அங்கம்

ஈமானின் முதல் அங்கம் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்புவது. 16- அபூதாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபி (ஸல்)அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் பின் ஹிஷாம்,அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஈமானின் முதல் அங்கம்

ஏற்றுக் கொள்ளும் வரை..

லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுன் ரசூலுல்லாஹ் என்பதை ஏற்றுக் கொள்ளும் வரை மக்களுடன் போரிடுதல். 13- நபி (ஸல்) அவர்கள் மரணித்து, அபூபக்ர் (ரலி) ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஜகாத்தை கடமையை மறுத்ததன் மூலம்) இறை நிராகரிப்பாளர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர்(ரலி) தயாரானார்கள்) அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஏற்றுக் கொள்ளும் வரை..

விசுவாசம், பேணுதல் மற்றும் அழைப்பு

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங்கொள்வது. மார்க்கக் கடமைகளைப் பேணுவது. மக்களை அதன் பால் அழைப்பது 10- இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் : அப்துல் கைஸூடைய தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்த போது, வந்திருக்கும் இம்மக்கள் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ரபீஆ வம்சத்தினர் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on விசுவாசம், பேணுதல் மற்றும் அழைப்பு