Category Archives: எச்சரிக்கை

சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல்

இறைமார்க்கத்தின் சிறப்பம்சம் என்னவெனில் மனிதனுடைய விவகாரங்களைச் சீர் செய்யக்கூடிய அனைத்தையும் அது கூறியுள்ளது. அவற்றில் ஒன்று அசுத்தத்தை நீக்குவது. அதனால் தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதும், கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா? தூய்மையும் சுத்தமும் எப்படி ஏற்படுமென்ற விபரத்தையும் இம்மார்க்கம் விவரித்துள்ளது. மக்களில் சிலர், அசுத்தத்தை நீக்குவதில் கவனக் … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல்

கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.

‘உங்களில் ஒருவர் நெருப்பின் மீது அமர்ந்து அது அவருடைய ஆடையை எரித்து தோலையும் பதம் பார்ப்பது கப்ரின் மீது அமர்வதை விட சிறந்தது’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

Posted in எச்சரிக்கை | Comments Off on கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.

மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

பிறருக்குத் தீங்கிழைத்தல் என்பதும் இல்லை, பிறரால் தீங்கிற்கு உள்ளாவதென்பதும் இல்லை என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அந்த அடிப்படையில் ஒருவன் தனது வாரிசுகளுக்கு (மரணசாசனத்தின் மூலம்) தீங்கிழைப்பது தடை செய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்கின்றவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது.

Posted in எச்சரிக்கை | Comments Off on மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

கனவில் பொய்யுரைத்தல்

சிலர் காணாதக் கனவுகளைக் கண்டதாக இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். மக்களுக்கு மத்தியில் நற்பெயரையோ, சிறப்பையோ பெறுவதற்காக, அல்லது பொருளாதார இலாபம் பெறுவதற்காக அல்லது தம் எதிரிகளை அச்சுறுத்துவதற்காக இன்னும் இதுபோன்ற நோக்கங்களுக்காக இவ்வாறு செய்கின்றனர். பெரும்பாலான பாமரர்களுக்கு கனவுகளில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளது. அதனால் இப்பொய்க் கனவுகள் மூலம் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். காணாத கனவுகளைக் கண்டதாகக் … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on கனவில் பொய்யுரைத்தல்

உயிருள்ளவற்றின் உருவங்களை வரைதல்

ஆடைகள், சுவர்கள், காகிதங்கள் போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவங்களைத் தீட்டுவது ஹராமாகும். ‘மறுமையில் அல்லாஹ்விடத்தில் கடுமையான வேதனைக்குரியவர்கள் உருவங்களைத் தீட்டுபவர்களே’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி. ‘நான் படைப்பதைப் போன்று படைக்க முற்படுபவனை விட அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? ஒரு வித்தையேனும் அல்லது ஒரு சிறு எறும்பையேனும் அவர்கள் படைக்கட்டுமே! … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on உயிருள்ளவற்றின் உருவங்களை வரைதல்

சிகைக்கு கருப்பு சாயம் பூசுதல்

சரியாகச் சொல்வதென்றால் இது ஹராமாகும். ஏனெனில் இது குறித்து நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. ‘புறாக்களின் (கருத்த) மார்புப் பகுதியைப் போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on சிகைக்கு கருப்பு சாயம் பூசுதல்

நடை, உடை, பாவனையில் ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் ஒப்பாகுதல்.

அல்லாஹ் மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்ற இயற்கை சுபாவம் என்னவெனில் ஒரு ஆண், எந்த ஆண்மையின் மீது அல்லாஹ் அவனைப் படைத்தானோ அந்த ஆண்மையையும் ஒரு பெண், எந்தப் பெண்மையின் மீது அல்லாஹ் அவளைப் படைத்தானோ அந்தப் பெண்மையையும் பேணி பாதுகாப்பதாகும். இது, மனிதர்களின் வாழ்க்கை எந்தக் காரண காரியங்களைக் கொண்டல்லாமல் சீர் பெற முடியாதோ அந்தக் காரண … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on நடை, உடை, பாவனையில் ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் ஒப்பாகுதல்.

ஒட்டு முடி வைத்தல்

முஸ்லிமுடைய ஒரு அறிவிப்பில், அபூபக்ருடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மகள் புதிதாக மணமுடிக்கப் பட்டிருக்கிறாள். அவளது தலையில் புண் ஏற்பட்டு முடி கொட்டுகிறது. நான் அவளுக்கு ஒட்டு முடி வைக்கலாமா? எனக் கேட்டாள். அதற்கவர்கள், ஒட்டு முடி வைப்பவளையும், வைத்து … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on ஒட்டு முடி வைத்தல்

பெண்கள் சிறிய, மெல்லிய இறுக்கமான ஆடை அணிதல்

இன்றைய காலத்தில் நம்முடைய எதிரிகள் நவீன, நவநாகரீக உடைகளை பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் தயாரித்து முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவவிட்டுள்ளதன் மூலம் நமக்கெதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளனர்.

Posted in எச்சரிக்கை | Comments Off on பெண்கள் சிறிய, மெல்லிய இறுக்கமான ஆடை அணிதல்

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல்

மக்கள் சாதாரணமாகக் கருதக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.ஆனால் அது அல்லாஹ்விடம் மிகப் பெரிய விஷயமாகும். சிலர் தரையைத் தொடுமளவுக்கு ஆடை அணிகின்றனர். இன்னும் சிலர் தமது ஆடையைத் தரையோடும் இழுத்துச் செல்கின்றனர்.

Posted in எச்சரிக்கை | Comments Off on கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல்