Category Archives: எச்சரிக்கை

பெண்கள் கவனத்திற்கு…

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on பெண்கள் கவனத்திற்கு…

‘எச்சரிக்கை’ நூலின் முடிவுரை

இதுவரை மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்ற விலக்கப்பட்ட காரியங்களை முடிந்தவரை இங்கு கூறியுள்ளோம். 

Posted in எச்சரிக்கை | Comments Off on ‘எச்சரிக்கை’ நூலின் முடிவுரை

முஸ்லிமை வெறுத்தல்

முஸ்லிம்களுக்கு மத்தியில் உறவு முறிவை உருவாக்குவது ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று. ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற பெரும்பாலோர் மார்க்கம் அனுமதிக்காத காரணங்களுக்காகவெல்லாம் தம் சகோதர முஸ்லிமை வெறுக்கின்றனர். தங்களிடையே உள்ள உறவை முறித்துக் கொள்கின்றனர். ஒன்று கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட ஏதாவது கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது அற்பமான காரணமாக இருக்கலாம்.

Posted in எச்சரிக்கை | Comments Off on முஸ்லிமை வெறுத்தல்

முகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்

‘முகத்தில் அடிப்பதையும் முகத்தில் சூடு போடுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’  என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

Posted in எச்சரிக்கை | Comments Off on முகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்

ஒப்பாரி வைத்தல்.

மிகப்பெரும் தீமைகளில் இதுவும் ஒன்றாகும். சில பெண்கள் இறந்தவருக்காக ஓலமிடுகின்றனர். இறந்தவரின் நல்லியல்புகளை எடுத்துக் கூறி ஒப்பாரி வைக்கின்றனர். முகத்திலும், கன்னங்களிலும் அடித்துக் கொள்கின்றனர். அதுபோல ஆடையைக் கிழித்துக் கொள்கின்றனர். தலையை மழித்துக் கொள்கின்றனர், அல்லது தலை விரித்துப் போட்டு அதைப் பிய்த்துக் கொள்கின்றனர். இவையாவும் விதியைப் பொருந்திக் கொள்ளாததையும், துன்பத்தை சகித்துக் கொள்ளாததையுமே காட்டுகிறது. … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on ஒப்பாரி வைத்தல்.

சபித்தல்

பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.

Posted in எச்சரிக்கை | Comments Off on சபித்தல்

Backgam Mon எனும் ஒருவகை சூதாட்டம்

மக்களிடையே பரவலாக வழக்கத்திலுள்ள பெரும்பாலான விளையாட்டுகள் ஹராமான காரியங்களை உள்ளடக்கியுள்ளன. அதில் ஒன்று Backgam Mon எனும் ஒருவகை விளையாட்டாகும். இதை விளையாட ஆரம்பித்தால் இது போன்ற பல விளையாட்டுகளுக்கு இது இட்டுச் செல்லும். பல சூதாட்டங்களுக்கு வழி திறந்து விடுகின்ற Backgam Mon எனும் இந்த விளையாட்டு குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on Backgam Mon எனும் ஒருவகை சூதாட்டம்

மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

பிறருக்குத் தீங்கிழைத்தல் என்பதும் இல்லை, பிறரால் தீங்கிற்கு உள்ளாவதென்பதும் இல்லை என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அந்த அடிப்படையில் ஒருவன் தனது வாரிசுகளுக்கு (மரணசாசனத்தின் மூலம்) தீங்கிழைப்பது தடை செய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்கின்றவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது.

Posted in எச்சரிக்கை | Comments Off on மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்

திருக்குர்ஆனில் அல்லாஹ் அண்டை வீட்டார் குறித்து நமக்கு அறிவுரை கூறியுள்ளான்: “மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்

ஒட்டுக் கேட்டல்

அல்லாஹ் கூறுகிறான்: “துருவித் துருவி ஆராயாதீர்கள்” (அல்குர்ஆன்; 49:12). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘யாரேனும் மக்களின் செய்தியை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்டால் மறுமையில் அவனுடைய காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்’ நபிமொழி (தப்ரானி) அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய செய்தியை ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதற்காக பிறரிடம் எடுத்துச் சொன்னால் … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on ஒட்டுக் கேட்டல்